அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi ), “தந்திரங்கள் நிறைந்த” மற்றும் கட்சிக்கு எதிராக கலகம் செய்யும் “தங்கள் எதிரிகளின் தாளத்திற்கு நடனமாட வேண்டாம்,” என்று கட்சித் தலைவர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், அஹ்மத் ஜாஹிட்டின் கூற்று, மல்டிமீடியா அமைச்சர் அனுவார் மூசாவைக் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது, அவர் “பாஸ் கசிவுகள்” ஆவணத்தை அசாதாரணமான ஒன்றல்ல மற்றும் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை எனக் கூறினார்.
நிச்சயமாக விசுவாசமான கட்சி உறுப்பினர்கள், தங்கள் தலைவர்கள் மற்றும் எதிரிகளின் தலைவர்களின் ஒவ்வொரு அறிக்கையிலும், ஒவ்வொரு, நடவடிக்கையிலும் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்.
விசுவாசமான கட்சி உறுப்பினர்கள் அம்னோவின் சொந்த முன்னுரிமைகள் முதலிடத்தில் இருப்பதை உறுதி செய்வார்கள், அதே சமயம் அம்னோவின் ஒருமித்த கருத்துக்களை காட்டிக் கொடுத்தவர்களுக்கு கட்சியின் முன்னுரிமைகளில் இடம் கொடுக்கப்படக்கூடாது.
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அனுவார் மூசா
“அம்னோவுக்கு வெளியே உள்ள எதிரிகள் தந்திரமாக இருந்து, பல்வேறு தந்திரங்களையும் உத்திகளையும் பயன்படுத்தி நம்மை ஏமாற்ற முயலும்போது, சாதாரண உறுப்பினர்கள், கட்சிக்காரர்களாகிய நாம் எதிரணியின் அசைவுகளைப் படிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என்று ஜாஹிட் நேற்று ஃபேஸ்புக்கில் கூறினார்
அந்நியக் கட்சியின் எதிரிகளின் தாளத்திற்கு நடனமாடுவதைப் போல நாம் செயல்பட வேண்டாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
அம்னோவின் போட்டியாளர்களான பெர்சத்து மற்றும் PAS ஆகியவற்றுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டதால், கடந்த ஆண்டு அம்னோவின் உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் இருந்து அன்னுார் நீக்கப்பட்டார்.
வியாழனன்று, ஜாஹித்தின் வழக்கறிஞர் ஹிஸ்யாம் தே போ டீக் (Hisyam Teh Poh Teik) நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகக் கூறப்படும் ‘பாஸ்லீக்’ ஆவணம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
“மத்திய பாஸ் தலைமையின் அரசியல் தலையீடு பற்றிய அறிக்கை,” என்ற தலைப்பில் உள்ள ஆவணத்தின் உள்ளடக்கத்தால் அவரது கட்சிக்கார்ர அதிர்ச்சியடைந்தார்,” என்று ஹிஸ்யாம் கூறினார்.
இந்த ஆவணம் உயர் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டுள்ள தனது கட்சிக்காரர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜாஹிட், அனுவாரின் அறிக்கையை தனது முகநூலில் பதிவேற்றியவர், “கட்சியின் கொள்கைக்கு எதிரான ஒன்று அல்லது இரண்டு அறிக்கைகள் ஒரு தற்செயல் நிகழ்வாக கருதப்படலாம், ஆனால் அது பல முறை இருந்தால் அது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.