சுகாதார துறை ஏப்ரல் 27 அன்று SOP தளர்வை அறிவிக்க உள்ளது – கைரி

சுகாதார அமைச்சகம் ஏப்ரல் 27 அன்று, கோவிட் -19 நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) தளர்த்துவதை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் (மேலே) செய்தியாளர்களிடம் கூறுகையில், ” MOH வின் திட்டங்களைப் பற்றி நான் பிரதமரிடம் தெரிவித்துள்ளேன்,  புதன்கிழமை அன்று ஒரு அறிவிப்பை வெளியிடுவேன்”. என்றார்.

முன்னதாக, போர்ட் டிக்சனில் உள்ள பண்டார் சுங்கலாவில்(Bandar Sunggala) கோவிட் -19 தொற்று நோய்யுக்கு பலியான பெற்றோரான தாஹர் மற்றும் நஜிதா இட்ரிஸ் ஆகியோரை இழந்த  ஐந்து உடன்பிறப்புகளை அவர் சந்தித்தார்.

அவர்கள் ஐவர் முகமது ஹைதிர் ரோட்ஸி, 24; முகமது ஹேரி ரோட்ஸி, 21; நூர்ஹைரிகா ரோட்ஸி, 19; முகமது ஹைகியேல் ரோட்ஸி, 14; மற்றும் முகம்மது கியர்சாமானி ரோட்ஸி, 8.

முன்னதாக, முகக்கவசங்களை அணிவது, வளாகத்திற்குள் நுழையும் போது மைசெஜாத்ரா பயன்பாட்டை ஸ்கேன் செய்வது மற்றும் விமான நிலையங்களில் கோவிட் -19 கண்டறிதல் சோதனைகள் தொடர்பாக SOPயில் மூன்று முக்கிய நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று பிரதமர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.