ஹரி ராயா ஐடில்பித்ரி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் கட்டணமில்லா மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயணத்தை வழங்குவதற்காக 30 நெடுஞ்சாலை சலுகைதாரர்களுக்கு அரசாங்கம் ரிம77.11 மில்லியனை இழப்பீடாக வழங்குகிறது.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்) மற்றும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணம் பொருந்தும் என்றும், மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு 30 முதல் 50% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இது ஏப்ரல் 30 முதல் மே 1 வரையிலும், மே 7 முதல் 8 வரையிலும் பொருந்தும்.
ஒரு வார விடுமுறைக்குப் பிறகு சொந்த ஊர்களில் இருந்து நகரங்களுக்குத் திரும்புபவர்களுக்கு வசதியாக இவ்வாறு செய்யப்படுகிறது என்றார்.
கோவிட் -19 தொற்றுநோய் சாலைப் பயனீட்டாளர்களின், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.
“இந்த இலவச மற்றும் தள்ளுபடி பயணமானது ஐதில்பித்ரி விழாவை தங்கள் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்பப்படுகிறது,” என்று இஸ்மாயில் சப்ரி இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
கட்டணமில்லா நெடுஞ்சாலைகள்:
பிளஸ்
வடக்கு – தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு (North-South Expressway Central Link) (Elite)
சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலை (Seremban-Port Dickson Highway)
பட்டர்வொர்த் – குலிம் எக்ஸ்பிரஸ்வே (Butterworth-Kulim Expressway)
மலேசியா – சிங்கப்பூர் இரண்டாவது இணைப்பு (லிங்கேடுவா)( Malaysia-Singapore Second Link) (Linkedua)
பினாங்கு பாலம் (Penang Bridge)
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (LPT) 1 மற்றும் 2 (East Coast Expressway (LPT) 1 and 2)
கோலாலம்பூர் – காரக் விரைவுச்சாலை (Kuala Lumpur-Karak Expressway)
50 சதவீதம் தள்ளுபடி உள்ள நெடுஞ்சாலைகள்:
ஷா ஆலம் விரைவுச்சாலை (கேசாஸ்) தமன்சரா (Shah Alam Expressway (Kesas))
புச்சோங் விரைவுச்சாலை (எல்டிபி) (Damansara Puchong Expressway (LDP))
சேரஸ்-கஜாங் விரைவுச்சாலை (கிராண்ட்சாகா) (Cheras-Kajang Expressway (Grandsaga))
சுங்கை பெசி நெடுஞ்சாலை (பெஸ்ரயா) (Sungai Besi Highway (Besraya))
அம்பாங்-கோலாலம்பூர் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை (அக்லே)( Ampang-Kuala Lumpur Elevated Highway (Akleh))
கோலாலம்பூர்-புத்ராஜெயா விரைவுச்சாலை (மெக்ஸ்) (Kuala Lumpur-Putrajaya Expressway (Mex))
துடா-உலு (Duta-Ulu Kelang Expressway (Duke)) .
30 சதவீதம் தள்ளுபடி உள்ள நெடுஞ்சாலைகள்:
குத்ரி காரிடார் எக்ஸ்பிரஸ்வே (குத்ரி) (Guthrie Corridor Expressway (Guthrie))
கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் எக்ஸ்பிரஸ்வே (லடார்) (Kuala Lumpur-Kuala Selangor Expressway (Latar))
பட்டர்வொர்த் வெளிவட்ட சாலை (எல்எல்பி) (Butterworth Outer Ring Road (LLB))
புயல் நீர் மேலாண்மை மற்றும் சாலை சுரங்கம் (ஸ்மார்ட்) (Stormwater Management And Road Tunnel (Smart))