அரசியல் பொருளாதார நிபுணர் பேராசிரியர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ்((Edmund Terence Gomez’s) பேராக்கில் வெளியேற்றப்பட்ட 329 விவசாயிகளுக்கு பின்னணியில் மாநில அரசின் சமூக பொருளாதார அமைப்புமுறையின் அடக்குமுறை தன்மைதான் என்கிறார்.
விவசாயிகளுக்கான ஆதரவு குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அடங்கிய பார்வையாளர்களிடம் பேசிய கோமஸ், ” மந்திரி பெசார் என்ற ஒரு மனிதருக்கு அதிகாரத்தை மையப்படுத்த மாநில அரசு எவ்வாறு சூழ்ச்சி செய்துள்ளது என்பதைக் காட்டுங்கள்” என்றார்.
விவசாய்கள் கூட்டமைப்பை (Gabungan Petani) உருவாக்கிய 11 பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 1,832 ஏக்கர் விவசாய நிலம் சம்பந்தப்பட்ட கட்டாய வெளியேற்றங்களை எதிர்கொண்டனர். இவர்கள் PSM தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயகுமார் தேவராஜ் தலைமையில் வழிநடத்தப்பட்டனர்.
ஏப்ரல் 8 ஆம் தேதி பேராக்கில் கைது செய்யப்பட்ட ஒரு விவசாயியை விடுவிக்கக் கோரி முகநூலில் பதிவிட்டது தொடர்பாக ஜெயக்குமாரிடம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505 (C) மற்றும் தகவல்தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் சமீபத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
கேள்விக்குரிய 11 பகுதிகளின் வழக்குகளை ஆராய்ந்த கோமஸ், மந்திரி பெசார் எவ்வாறு மாநிலத்தின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்பதை நீதிமன்றங்களுக்குக் காட்டுமாறு குழுவை வலியுறுத்தினார். இது நிலத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் மட்டுமே முடிவெடுக்கும் ஒரே நபராக இருக்க அனுமதித்தது. பிரச்சனையின் உண்மையான காரணத்தை குழு கண்டறிய வேண்டும் என்று அவர் விளக்கினார்.
“மந்திரி பெசார் நிலத்தை ஒரு நபருக்கு கொடுத்தவுடன் (விற்றால்), அதை அந்த டெவலப்பர் சொந்தமாக்கி கொள்வார்.” என்று அவர் கூறினார்.
பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரன்ஸ் கோம்ஸ்
செமோரில் எட்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, 20 விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கைக் குறிப்பிட்ட கோமஸ், விவசாயத்திற்காக அபிவிருத்தி செய்வதற்காக நிலத்தை அறக்கட்டளையாக வழங்கிய விவசாயிகளிடமிருந்து நிலம் எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக விவசாயிகள் நிலத்தில் எந்த முரணான நடவடிக்கைகளையும் செய்யவில்லை.
“30 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் விவசாய நோக்கங்களுக்காக விவசாயிகள் விரும்பியபடி பயன்படுத்துவதற்கான நிலத்தை, விவசாயிகளுக்கு அந்நியப்படுத்திய இந்த சூழ்நிலையில் வரலாறு மறக்கப்படுகிறது.
அவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் உரிமையாளர்களாக இருந்தனர், இப்போது அரசு அதை எடுத்துக்கொள்கிறது, ஆனால் எந்த அடிப்படையில்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பத்தாண்டுகளுக்குப் பிறகும் உணவுப் பொருட்கள் தன்னிறைவுக்குக் கீழே
பேராக்கில் விவசாய நிலம் எவ்வாறு தவறாக நிர்வகிக்கப்பட்டது என்பதை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக அந்த குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக ஜெயக்குமார் கூறினார்.
இது போல் விவசாயிகளை வெளியேற்றுவது மலேசியாவின் உணவு இறக்குமதியை அதிகரித்துள்ளது . பேங்க் நெகாரா மலேசியா அதன் 2021 காலாண்டு அறிக்கையில் (Box Report Quarterly Bulletin), 14 உணவு பொருட்களில் 13 தேவைக்கு குறைவான அளவில்தான் கடந்த பத்தாண்டுகளாக அப்படியே இருப்பதாக தெரிவித்துள்ளது.
இறைச்சிகள் மற்றும் பல காய்கறி பழங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, மக்கள் பெருமளவு இறக்குமதியை நம்பியுள்ளனர் என்பதையும் அறிக்கை வெளிப்படுத்தியது.
அதிக உணவு இறக்குமதி சார்புநிலை, அதோடு வளர்ச்சியடையாத விவசாய-உணவுத் துறையும் பல ஆண்டுகளாக பற்றாக்குறையை பதிவு செய்து வருவதாக அறிக்கை கூறுகிறது.
அடிப்படையில், சராசரியாக ஒரு மலேசியரின் நிகர உணவு இறக்குமதிச் செலவு அவர்களின் வருமானத்தைவிட வேகமாக வளர்ந்துள்ளது என்பதை அறிக்கை வெளிப்படுத்தியது.
நாட்டின் பரந்த வளங்கள் மற்றும் விவசாய-உணவுத் தொழிலில் உள்ளுறை சாத்தியமான போதிலும். அடிப்படையில், நாட்டின் பரந்த வளங்கள் மற்றும் வேளாண் உணவுத் துறையில் திறன் இருந்தபோதிலும், சராசரியாக, ஒரு மலேசியரின் நிகர உணவு இறக்குமதி கட்டணம், அவர்களின் வருமானத்தை விட வேகமாக வளர்ந்துள்ளது என்பதை அறிக்கை வெளிப்படுத்தியது.
‘விவசாயிகள் பிரச்சனையில் இருந்து விலகினால்…’
விவசாயி மைக்கேல் ஃபோங், பொதுமக்களிடம் தனது வேண்டுகோளில், இந்தப் பிரச்சினை அவர்களுடையது மட்டுமல்ல, இன்று தீர்க்கப்பட வேண்டிய ஒரு சமூகப் பிரச்சினை என்று கூறினார்.
“நம் அரசாங்கம் உணவுப் பாதுகாப்பைப் புரிந்து கொள்ளவில்லை, அனைவரும் விரைவாக பணக்காரர்களாக மாற விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
ஒரு சில விவசாயிகள் மட்டுமே அரசின் நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் அளவுக்கு தைரியமாக இருப்பதாகக் கூறிய ஃபோங், பெரும்பாலான விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்து பயமுறுத்தப்பட்டதாக விளக்கினார்.
“பெரும்பாலான விவசாயிகள் பிரச்சனையை விரும்பவில்லை, ஆனால் விவசாயிகள் பிரச்சனையிலிருந்து விலகிச் சென்றால், மலேசியாவின் கதி இன்னும் மோசமாகும் ” என்று அவர் கூறினார்.
இன்னும் தங்கள் வழக்கை விசாரிக்க வழக்கறிஞர்களை நாடுகின்றனர்
கேள்விக்குரிய விவசாய நிலத்தின் 11 மனைகளில், டெவலப்பர்கள் ஏற்கனவே கம்பாரில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து 100 விவசாயிகளை வெளியேற்றியது, அதே நேரத்தில் தனா ஹிதாமில் உள்ள 16 விவசாயிகள் தங்கள் வழக்கை மந்திரி பெசாரிடம் முறையீடு செய்துள்ளனர்.
கோலா குவாங்கில் (Kuala Kuang), இரண்டாம் உலகப் போருக்கு முன்பு முதல் 56 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வரும் எட்டு விவசாயிகள், சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்று குற்றம் சாட்டி டெவலப்பரிடமிருந்து ஒரு வழக்கறிஞரின் மிரட்டலை பெற்றுள்ளனர்.
இங்குள்ள நிலத்தில் இவர்கள் மீன், மாடு மற்றும் எருமை பண்ணைகளையும் மற்றும் பயிரிட்டும் வருகின்றனர்.
இதற்கிடையில், கெமோரில் 31 விவசாயிகள் மற்றும் தனா இத்தாம்(Tanah Hitam) மற்றொரு பகுதியினர் தங்கள் வழக்கை நடத்த வழக்கறிஞர்களை நாடுகின்றனர்.
இன்னொரு இடத்தில், கால்பந்து அணி வீரர்களுக்கு நிலம் வழங்க காலம்காலமாக விவசயம் செய்த நிலத்திலிருந்து வெளியேற்ற நோட்டீஸை வழங்கியது மாநில அரசு. .
மீதமுள்ள 174 விவசாயிகள், பிடோர்(Bidor), குவாலா குவாங்(Kuala Kuang), கெமோர்(Chemor), கம்பார்(Kampar), மற்றும் புசிங்(Pusing) ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்கியுள்ளனர், உள்ளூர் நிலச் சட்டங்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாததால் தாங்கள் தோல்வியுறும் போரில் ஈடுபடுகிறோம் என்று பயப்படுகிறார்கள்.
பேராக் ஆட்சியாளர் மற்றும் அமைச்சரவையிடம் முறையிடுதல்
பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவது மட்டுமின்றி , மாநிலத்தில் விவசாயப் பண்ணைகளின் மேலாண்மை குறித்து விசாரிக்க மாநில அளவிலான அரச ஆணையத்தை அமைக்குமாறு இந்த குழு பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவிடம்(Nazrin Shah) முறையிடும் என்று ஜெயக்குமார் கூறினார்.
பேராக் மாநில வளர்ச்சிக் கழகம் அல்லது பேராக் மாநில வேளாண்மை வளர்ச்சிக் கழகம் போன்ற அரசு நிறுவனங்களால் சிறு விவசாயிகள் எவ்வாறு வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை சுல்தான் நஸ்ரினுக்கு விளக்க இந்த கடிதம் அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
“நிலத்தை ஆக்கிரமித்துள்ள விவசாயிகள் கடந்த 80 ஆண்டுகளாக நிலத்தில் விவசாயம் செய்து வருவதால் அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், மேலும் அவர்களின் அறிவு தேசத்திற்கு ஒரு சொத்து, அது பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“நிலையான விவசாயத்தை நிர்வகிப்பதில் பேராக் மாநில அரசாங்கத்திற்கு ஒரு ஆலோசனைப் பங்காக பணிக்குழு கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்வோம்,” என்று அவர் விளக்கினார், இந்த இரண்டு முயற்சிகளிலும் அவர்களுக்கு பொது ஆதரவு தேவைப்படும் என்றும் கூறினார்.
தேவையற்ற வெளியேற்றம் தொடர்பான சுயாதீன குழு
மாநில நில ஒழுங்குமுறைகள் மற்றும் தேசிய நிலச் சட்டம் ஆகியவற்றில் விவசாய்களுக்கு போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.
பேராக் நில ஒழுங்குமுறைகள் 1966 இன் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய ஒரு சுதந்திரமான நில வாரியத்தின் தேவையைப் பரிந்துரைத்து நாங்கள் முதல்வருக்கு ஒரு குறிப்பாணை அனுப்பியுள்ளோம்.
“மாநில வளர்ச்சிக் கழகம் அல்லது மாநில வேளாண்மை வளர்ச்சிக் கழகம் முன்மொழிந்த திட்டங்களை பரிசீலனை செய்யவும் ஒடுக்கவும் ஒரு சுயேட்சையான ஆணையம் தேவை என்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.
“அந்த ஆணைய அதிகாரத்தை கடக்க விரும்பினால், அவர்கள் மாநில சட்டமன்றத்தில் தங்கள் வாதத்தை முன்வைக்கலாம்,” என்று அவர் கூறினார்.
மாநில அரசின் அராஜகமான நில ஆக்கிரமிப்பை கட்டுபடுத்த புதிய அணுகுமுறைகள் தேவை. அரசாங்கம் இதை அமுல்படுத்தாவிட்டால், விவசாயம் சீர்குலையும் அதோடு நமது நாடு உணவு உற்பத்திற்கு அயல் நாட்டை நம்ப வேண்டி வரும் என்பதுதான், இது விவசாய்களின் வாதத்தின் மூலமாக உள்ளது.