மே 1 முதல் குறைந்தபட்ச ஊதியமாக ரிம1,500

மே 1 முதல் புதிய குறைந்தபட்ச ஊதியமான ரிம1,500,  நேற்று அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் வெளியிட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு நேற்று தலைமை அதிகாரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பத்தி 4(1)ன் கீழ் உள்ள அரசிதழின்படி, அடிப்படை ஊதியம் வழங்கப்படாத ஒரு ஊழியருக்கு, வேலையின் விகிதம், கொள்ளவு , பணி, பயணம் அல்லது கமிஷன் அடிப்படையில், மே 1 முதல் ஊழியருக்கு வழங்கப்படும் மாத ஊதிய விகிதம் ரிம1,500ஐ விட குறைவாக இருக்க கூடாது.

“ஆறு வேலை நாட்களுக்கு, பணியாளருக்கு ஒரு நாளைக்கு ரிம57.69, ஐந்து வேலை நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரிம69.23 மற்றும் நான்கு நாட்கள் வேலை செய்வதற்கு ஒரு நாளைக்கு ரிம86.54, ஒரு மணிநேர விகிதமான ரிம7.21க்கு சமம் என்ற அடிப்படையில் ஊதியம் இருக்கும்.

குறைந்தபட்ச சம்பள ஆணை 2022 என்ற தலைப்பிலான தேசிய ஊதிய ஆலோசனைக் கவுன்சில் சட்டம் 2011 அரசிதழின் படி “இந்தப் பத்தியானது, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தும் முதலாளியால் பணியமர்த்தப்படும் ஊழியருக்குப் பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளது.

பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், மனித வள அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட மலேசிய தரநிலை வகைப்பாடுகளின் (மாஸ்கோ) கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழில்முறை செயல்பாட்டைச் செய்யும் ஒரு பணியாளருக்கும் இந்த பத்தி பொருந்தும்.

மே 1 முதல் நடைமுறைக்கு வரும் குறைந்தபட்ச ஊதியமான ரிம1,500 சட்டத்திலிருந்து, ஐந்துக்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட  முதலாளிக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், அது  ஜன. 1, 2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

சமீபத்திய அரசிதழின் அறிவிப்பின் பயனாக பழைய  குறைந்தபட்ச ஊதிய ஆணை 2020 இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப் மார்ச் 19-இல்  மே 1 முதல் நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியம் ரிம1,500 என்று அறிவித்திருந்தார்.

 

-freemalaysiatoday