ஒப்பந்தம் முடிவடையும் 2,506 ஒப்பந்த ஆசிரியர்களின் கதி

கல்வி அமைச்சினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சுமார் 2,506 ஆசிரியர்களின் ஒப்பந்தங்கள் ஜூன் மாதத்துடன் காலாவதியாகிவிடும் என்று குலாய்( Kulai MP ) நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் (Teo Nie Ching) கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சு அவர்களின் துயரங்களுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் அல்லது அடுத்த மாதம் அவர்களின் ஒப்பந்தங்களை நீட்டிக்க வேண்டும் என்று முன்னாள் கல்வி துணை அமைச்சர் தியோ கூறினார்.

மலேசியாகினியிடம் பேசிய தியோ, 2,506 ஒப்பந்த ஆசிரியர்கள் தங்கள் அவலநிலை குறித்து தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

இந்த ஒப்பந்த ஆசிரியர்கள் அனைவரும் தற்போது முதுகலை டிப்ளமோ படித்து வருகின்றனர், மேலும் ஜூன் 10, 2020 அன்று தங்கள் இரண்டு ஆண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

அனைத்து ஒப்பந்த ஆசிரியர்களும் மே 27 வரை செயல்முறை பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களின் செமஸ்டர் முடிவுகள் ஜூலை 2022 இல் மட்டுமே தெரியவரும்.

ஜூன் 10-ம் தேதி ஒப்பந்தம் முடிவடைந்தால், இந்த ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஜூன் 11 முதல் சம்பளம் வழங்கப்படாது. இது இந்த ஆசிரியர்களுக்கு, குறிப்பாக திருமணமாகி குடும்பம் நடத்துபவர்களுக்கு சுமையாக இருக்கும்,” என்றார்.

வழக்கமாக, முதுகலை பட்டப் படிப்புகளை முடித்தவுடன், ஒப்பந்த ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தியோ விளக்கினார்.

இந்த ஆசிரியர்கள் ஆங்கிலம், பஹாசா மலேசியா, வரலாறு, இஸ்லாமிய கல்வி மற்றும் உடற்கல்வி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று அவர் கூறினார்.