இந்தவாரம் கை, கால் மற்றும் வாய் நோய் நேர்வுகள் – 547 ஐ தொட்டது – சிலாங்கூரில் எச்சரிக்கை

சிலாங்கூரில் கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) வாராந்திர நேர்வுகளின் எண்ணிக்கை இப்போது எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளது என்று சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷாரி ஙகாடிமான் கூறியுள்ளார்.

ஏப்ரல் 27 ஆம் தேதி நிலவரப்படி, ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கும் இந்த நோய், 5,346 நேர்வுகள் பதிவு செய்துள்ளது, வாராந்திர எண்ணிக்கை ஆபத்தான அளவைத் தாண்டியுள்ளது.

“அதே நேரத்தில், 112 HFMD கிளஸ்டர்களில் 547 நேர்வுகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 95% நர்சரிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களில் உள்ள கிளஸ்டர்களை உள்ளடக்கியது, ஆனால் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுகாதாரத் துறை ஜேகேஎன்எஸ் பொதுமக்களை, குறிப்பாக தொழில்முனைவோர் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பவர்கள், வளாகங்கள், தரைகள், குளியலறைகள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் உபகரணங்களின் தூய்மையை உறுதி செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது என்று ஷாரி கூறினார்.

“அது தவிர, பொறுப்பான தரப்பினர் ஒரு இடத்தின் நுழைவாயிலில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும், குழந்தைகளைக் கையாளும் போது கைகளை கழுவுதல் உட்பட தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்,டயப்பர்கள் மூடப்பட்ட தொட்டிகளில் வீசப்படுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு HFMD கிளஸ்டர் புகாரளிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

HFMD  நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொது இடங்களுக்கு கொண்டு வர வேண்டாம், சோப்புடன் கைகளை கழுவுதல் மற்றும் குழந்தைகளின் பொம்மைகளையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

HFMD என்பது வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் ஒரு நோயாகும், குறிப்பாக Coxsackie வகைகள் A16 மற்றும் Enterovirus 71 (E71) ஆகியவை நாசி திரவம், உமிழ்நீர், கொப்புளங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் மலம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.

-freemalaysiatoday