தொழிலாளர் தின விடுமுறை புதன்கிழமைக்கு மாற்றம் – பிரதமர் இஸ்மாயில்

திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ஏற்ப தொழிலாளர் தின விடுமுறை மே 4 புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

விடுமுறை நாட்கள் சட்டம் 1951 (சட்டம் 369), விடுமுறைகள் ஆணை (சபா கேப் 56) மற்றும் பொது விடுமுறைகள் கட்டளை (சரவாக் கேப். 8) ஆகியவற்றின் பிரிவு 3 இன் கீழ் உள்ள விதிகளின்படி இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாக பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால், கெடா, தெரெங்கானு, கிளந்தான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களுக்கு தொழிலாளர் தின விடுமுறையை  மாற்றுவது பொருந்தாது என்று அவர் கூறினார்.

“இருப்பினும், விடுமுறைகள் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடுவது அந்தந்த மாநில அதிகாரிகளுக்கு உட்பட்டது” என்று அவர் கூறினார்.

இதுவரை, ஜொகூர் மற்றும் டெரெங்கானு மட்டுமே முதலில் திட்டமிடப்பட்ட பொது விடுமுறைக்கு மாற்றாக புதன்கிழமையை பொது விடுமுறையாக அறிவித்துள்ளன.