நஸ்ரி: அவசர தேர்தல் நிலைத்தன்மையை அச்சுறுத்தும்

அரசாங்கம் இப்போது நிலையாகவும் நிம்மதியாகவும்  உள்ளது, விரைவில் பொதுத் தேர்தலுக்கான அழைப்புகளால் அதை அச்சுறுத்தக்கூடாது என்று படாங் ரெங்காஸ்(Padang Rengas) பாராளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ்(Nazri Abdul Aziz) கூறினார்.

அஸ்ட்ரோ அவானியிடம் பேசிய நஸ்ரி, தற்போது அம்னோ நாடாளுமன்றத்தைக் கலைக்க முயற்சித்தால், இந்த்ச் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்திய கட்சியை பொதுமக்கள் தண்டிப்பார்கள் என்றார்.

நிலையான அரசாங்கத்திற்கான யாங் டி-பெர்துவான் அகோங்கின் அழைப்புக்கு கட்சி செவிசாய்க்க வேண்டும் என்றார்.

யாங் டி-பெர்துவான் அகோங் நமக்கு நன்மை பயக்கும் ஒரு  நிலையான அரசாங்கத்தை விரும்புகிறார்.

“பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாட்டை சிறப்பாக நடத்தி வருகிறார். எந்த பிரச்சனையும் இல்லை. என்னைப் பொறுத்தவரை முன்கூட்டியே வாக்கெடுப்பு கேட்பவர்கள் சாக்குப்போக்குகளைதான் கூறுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இஸ்மாயில் சப்ரி – 9 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்தவர் – முன்கூட்டியே தேர்தலை நடத்த அவரது சொந்தக் கட்சியினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்னோவின் உச்ச கவுன்சில் அவரை கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஏப்ரல் 11இல் அறிவித்தது.

அம்னோ கட்சியின் தலைமைத் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல், பொதுத் தேர்தல்கள் நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க முயற்சிக்கிறது.

அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி கட்சித் தலைவராக இருப்பதை பறிக்கத்தான்  இந்த  முயற்சிஎன்று  பரவலாகப் பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முழு விருப்புரிமை அம்னோ தலைவருக்கு உள்ளது.

அம்னோவின் தற்போதைய தலைமை பதவிக் காலம் கடந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்திருக்க வேண்டும்.