டெங்கி, கை, கால், வாய் தொற்று நோய் அதிகரித்து வருகின்றன – சுகாதார அமைச்சர்

இந்த ஆண்டு, 16வது  வாரத்தில் 967 தொற்றுகளில் இருந்த டெங்கி  17வது வாரத்தில் 1,021 தொற்றுகளாக உயர்ந்துள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

ஏப்ரல் 24 முதல் 30 வரை (EW 17/2022) 54 தொற்றுகள் (5.6%) அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது,  இது 2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 9,270 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது டெங்கி தொற்றுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 12,942 ஆக கூடியுள்ளது..

“2022 ஆம் ஆண்டு 17 வது வாரத்தில் வரை டெங்கியால் ஏழு இறப்புகள் நடந்துள்ளன,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

17/2022 வரையில் நாடு முழுவதும் 22,463 கை, கால், வாய் நோய் (HFMD) தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் தொற்றுகள் கடுமையாக உயர்ந்துள்ளதை சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக நூர் ஹிஷாம் மேலும் கூறினார்.

2021 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 12.8 மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார், அப்போது 1,752 தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

டாக்டர் நூர் ஹிஷாம் கூறுகையில், 0 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளிடையே 21,508 நேர்வுகளும், அதைத் தொடர்ந்து 729 நேர்வுகள் 7 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கும்  மீதமுள்ளவை 12 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே நிகழ்ந்தன என்றார்..

நூர் ஹிஷாம் கூறுகையில், HFMD-யால் பெரும்பாலும் ஆறு வயது மற்றும் அதற்குக் குறைவான 21,508 குழந்தைகள் 2 தொற்றுகளால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அதைத் தொடர்ந்து 729 தொற்றுகள் 7முதல் 12 வயது வரை உள்ளவர்கள், மீதமுள்ளவர்கள் 12 வயதுக்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கியது என்றார்.

HFMD என்பது வைரஸ் தொற்றினால் ஏற்படும் ஒரு நோயாகும், குறிப்பாக Coxsackie A16 dan Enterovirus 71 (E71) என்ற வைரஸ் மூக்கு சலி , எச்சில், கொப்புளங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மலம் ஆகியவற்றின் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.

EW 17/2022 இன் போது மூன்று மாநிலங்களில் 767 HFMD தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதிக தொற்றுகள் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயால் தொடர்ந்து சிலாங்கூர் மற்றும் பேராக்கிலும் உள்ளன.

மேலும், டெங்கி பரவுவதைத் தடுக்க தேவையற்ற தண்ணீர்ப் பாத்திரங்களை சுத்தம் செய்வதும்  அப்புறப்படுத்துவதும் அதோடு  டெங்கி பரவும் இடங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

“மருத்துவப் பயிற்சியாளர்கள், தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின்  மூன்றாம் நாள் முழு இரத்த எண்ணிக்கையை  உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்”.

“மருத்துவ அம்சங்கள் மற்றும் இரத்த பரிசோதனையின் அடிப்படையில் நோயாளிகள் டெங்கி பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டால், நோயாளிகளுக்கு டெங்கி எச்சரிக்கை அட்டையை வழங்க வேண்டும் மற்றும் டெங்கி காம்போ சோதனை நடத்தப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுக்கவும்

HFMD ஐப் பொறுத்தவரை, சிறு குழந்தைகளின் பெற்றோர்கள் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவுதல், டயப்பர்களை மாற்றுதல், உணவு உண்பதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீச்சல் குளங்கள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற நெரிசலான பொது இடங்களுக்கு அறிகுறிகளுடன் குழந்தைகளை கொண்டு வர வேண்டாம் என்றும் நூர் ஹிஷாம் பெற்றோருக்கு நினைவூட்டினார்.

தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, சுகாதார அமைச்சகம், MySejahtera செயலி மூலம், கோவிட்-19 அல்லாத ரேபிஸ், டெங்கி மற்றும் சிக்கன்குனியா போன்ற தொற்றுகளைக் கண்டறிய புதிய தொற்று நோய் கண்டறிதல் அம்சங்களை செயல்படுத்தியுள்ளது என்றார்.

“இந்த அம்சங்கள் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவர்களின் பயணத்தை சிறப்பாக திட்டமிடவும் உதவும்,” என்று நூர் ஹிஷாம் மேலும் கூறினார்.