இல்லத்தரசிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சலுகைகளை வழங்குவதற்காக சமூக பாதுகாப்பு அமைப்பின் (Socso), பாதுகாப்பை விரைவுபடுத்துமாறு அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈப்போ பாரட் எம்பி எம்.குலசேகரன், மனிதவள அமைச்சர் எம்.சரவணன் 2021-இல், பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் காலத்தில் தொடங்கப்பட்ட சோக்சோ இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 மில்லியன் இல்லத்தரசிகள் விரைவில் பாதுகாப்பைப் பெறுவார்கள் என்று நேற்று கூறியிருந்தார்.
“இன்னும், இன்று வரை, எதுவும் செய்யப்படவில்லை”.
“இந்த நாட்டிலுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் சோக்ஸோவின் காப்புறுதிப் பாதுகாப்பு பற்றி அறிமுகப்படுத்துவதை விரைவுபடுத்துமாறு பிரதமரை நான் அழைக்கிறேன்”.
“ஹராப்பான் நிர்வாகத்தின் போது, வரைவு சட்டம் உருவாக்கப்பட்டது, மேலும் இது மில்லியன் கணக்கான இல்லத்தரசிகளை உள்ளடக்கியிருக்கும்”.
“ஹரப்பான் இன்னும் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த பாதுகாப்பும் நன்மையும் அனைத்து இல்லத்தரசிகள் மற்றும் தாய்மார்களையும் சென்றடைந்திருக்கும்,” என்று குலசேகரன் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதியளித்தபடி இந்த முயற்சியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய நிலையில், இன்று அன்னையர் தினம், இன்னமும் மௌனம் சாதித்து வருகிறார்கள் என்று குலசேகரன் குறிப்பிட்டார்.
“இல்லத்தரசிகள் மற்றும் தாய்மார்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்குவது முக்கியம், ஏனெனில் “அம்மாக்கள் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பரிசு” என்று அவர் கூறினார்.
மறைந்த தனது சொந்த தாயை நினைவு கூர்ந்த முன்னாள் மனித வளத்துறை அமைச்சராக இருந்த குலசேகரன், தனக்காகவும் தனது உடன்பிறப்புகளுக்காகவும் அவர் செய்த தியாகங்களை என்றும் மறக்க முடியாது என்றார்.
அவர் தனது தாயார் ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி என்றும், அவர் கர்ப்பமாக இருந்தபோதும் தொடர்ந்து வேலை செய்து கொண்டே, தனது மற்ற குழந்தைகளையும் கவனித்துக்கொண்டதாக கூறினார்.
“அவர் தனது குடும்பத்திற்காக தாங்கிக் கொண்ட துயரங்களை நான் ஒருபோதும் அறியமாட்டேன், அவர் தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவ்வளவு தியாகம் செய்தார்”.
“அனைத்து தாய்மார்களுக்கும் பாதுகாப்பு அளித்து அவர்களை கௌரவிப்பதின் வழி நமது தேசம் மேலும் முன்னோக்கி செல்லும். பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை அவர்களுக்கு வழங்குங்கள்,” என்று கேட்டுக்கொண்டார் குலா. .