இளம் வயதினரை வாகனம் ஓட்ட அனுமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – வீ கா சியோங்

சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் இளம் வயதினரை வாகனம் ஓட்ட அனுமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்(Wee Ka Siong) தெரிவித்துள்ளார்.

ஓட்டுனர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, வாகன உரிமையாளர் மீதும் கவனக்குறைவு மற்றும் எந்தவொரு தரப்பினருக்கும் காயம் ஏற்படுத்தியிருந்தால் அதற்காக  கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்.

நேற்ரு புத்ராஜெயாவில் உள்ள செரி பெர்டானாவில்(Seri Perdana) பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஹரிராயா திறந்த இல்லத்தில் சந்தித்த போது , ​​”குற்றம் நிரூபிக்கப்பட்டால், இளம் வயதினருக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீட்டுத் தொகை இல்லாததால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வீ (மேலே) செய்தியாளர்களிடம் கூறினார்.

கெடாவின் சுங்கை பெட்டானியில் உள்ள ஜலான் பிண்டாசன் செமெலிங்கில்(Jalan Pintasan Semeling) நேற்று நடந்த ஒரு விபத்து குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், 16 வயது சிறுவனால் ஓட்டப்பட்ட பல்நோக்கு வாகனத்தால் (MPV) புல்வெட்டும் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார்.

காயமடையாத சிறுவன்  மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கோலா முடா(Kuala Muda) காவல்துறைத் தலைவர் ஜைதி சே ஹாசன் (Zaidy Che Hassan) தெரிவித்தார்.

இதற்கிடையில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் விமான டிக்கெட்டுகளின் விலையும் உயர்ந்தது  என்று வீ கூறினார்.

எவ்வாறாயினும், பயணச்சீட்டு விலை உயர்வை கண்காணிக்குமாறு மலேசிய விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.