மணியம்: இண்டலோக் இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதால், இந்தியர்களின் ஓட்டு பாரிசான் பக்கம் திரும்புமா, கோமாளி?
கோமாளி: என்ன வேடிக்கையான கேள்வியை தொடுக்கிறாய் மணியம். அந்நிலைக்கு இந்தியர்கள் திரும்ப முற்பட்டால் அவர்கள் மனிதன் என்ற நிலையில் இருந்து அடிமைத்தனத்தை பெற்ற மிருகமாக மாறியுள்ளதாக பொருட்படும்.
ஐவன் பவ்லோப் (Ivan Pavlov) என்ற நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி, மிருகங்களை வசப்படுத்த இயலும் என்பதை நிருபித்தார். தனது நாயிக்கு உணவு கொடுக்கும் முன் மணியை அடித்துவிட்டு உணவு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு மணி அடித்துவிட்டு உணவு கொடுக்காமல் நாயின் நடத்தையை கவனித்தார். அதன் வாயில் எச்சில் ஊறுவதையும் மேலும் நாய் வாலை ஆட்டிக்கொண்டு சுத்தி சுத்தி நாக்கை நீட்டியவாறு வருவதையும் கண்டார்.
நாய் மிருகமாக இருப்பதால் அதனால் அப்படி செய்யமுடியும்.
மணியம், உங்களை சிறையில் அடைத்துவிட்டு மணி அடித்து சாப்பாடு போட்டால், பிறகு மணி அடித்தவுடன் எச்சில் ஒழுக நாக்கை நீட்ட உங்களால் முடியுமா?
இண்டர்லோக் நாவல், மலாய் காரர்களின் மேன்மையை ஊடுருவசெய்து, அதன்வழி இந்தியர் சீனர்களின் பூர்வீகம், மலேசியா கிடையாது, இவர்கள் பிழைக்க வந்தவர்கள், அடக்கித்தான் வாசிக்க வேண்டும் என்ற கருத்தை நிலைப்படுத்த எடுக்கப்பட்ட மட்டமான வியூகம்.
ஓர் நாட்டின் அரசாங்கம் அதன் அரசமைப்பின் படிதான் அரசாங்கத்தை அமைத்து வழி நடத்த வேண்டும். அரசமைப்பானது மக்கள், நீதி- நியாயம் என்ற கோட்பாடுகளுக்கு ஏற்றவகையில் மேம்பாடடையவும் சுயகௌரவத்துடன் வாழவும் வழிசெய்கிறது. இந்நிலையை நமது மனித உரிமை எனப் பிரகடனப்படுத்தி அதற்கு எதிரானவையை உரிமை அத்துமீறல் எனச் சாடுகிறது அரசமைப்பு.
இண்டர்லோக் அறிமுகம் ஒரு வலுக்கட்டாயமான பகிரங்க உரிமை கற்பழிப்பு.
மணியம், கற்பழிக்க வந்தவனை, அடித்துவிரட்டும்போது அவனை மணந்துகொள்ளளாமா? என்று கேட்பதுபோல் உள்ளது உங்கள் கேள்வி.