நேற்று முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளம் காரணமாக சபாவில், மூன்று மாவட்டங்களில் உள்ள 8 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில கல்வி இயக்குநர் மிஸ்டிரின் ராடின்(Mistirine Radin) தெரிவித்துள்ளார்.
(SMK) St Paul, (SK) Lago and SK Bukau ஆகிய மூன்று பள்ளிகள் பியூஃபோர்ட்டில் இருப்பதாக அவர் கூறினார்; நான்கு பள்ளிகள் டெனோமில் உள்ளன – SK Gumisi, SK Ladong Sapong ,SJKC Yuk Syn, மற்றும் SK Inubai, மற்றொன்று பெனாம்பாங்கில் உள்ள SK Tombovo.
“அனைத்து பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன, இதில் மொத்தம் 204 ஆசிரியர்கள் மற்றும் 2,425 மாணவர்கள் உள்ளனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நிலைமை மேம்பட்டு அவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்குத் திரும்பும் வரை, மாணவர்கள் தங்கள் பாடங்களை வீட்டு அடிப்படையிலான கற்றல் மற்றும் கற்பித்தல் முறை மூலம் தொடர்வார்கள்.