மூடுபனி (Haze) நிகழ்வுடன் வெப்பநிலையின் அதிகரிப்பு ஜூலை முதல் செப்டம்பர் வரை நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் போன்ற அண்டை நாடுகளில் ஏற்படும் வெப்பமண்டல புயல்கள், தீபகற்பத்தில் வறண்ட சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) இயக்குநர் ஜெனரல் முஹம்மது ஹெல்மி அப்துல்லா (Muhammad Helmi Abdullah) கூறினார்.
“இந்தோனேசியாவில், வறண்ட வானிலை அதிகமாக இருப்பதால் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் தென்மேற்கில் இருந்து காற்று மூடுபனி வடிவில் (புகையை கொண்டு) நம் நாட்டிற்கு வரும்,” என்று அவர் கூறினார்.
மெட்மலேசியா நேற்று தென்மேற்கு பருவமழை குறித்த அறிக்கையை வெளியிட்டது, இந்த சனிக்கிழமை தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உயரும் வெப்பநிலை மழை மேகங்கள் உருவாவதைக் குறைத்து, மழை இல்லாத நாட்களை அனுபவிப்பதோடு, குறைந்த மழைப்பொழிவை உருவாக்கும் என்றும் முஹம்மது ஹெல்மி கூறினார்.
எவ்வாறாயினும், சூறாவளி நிகழ்வு காரணமாக பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை மற்றும் மேற்கு சபாவில் ஏற்படலாம்.