கோவில் விழாவில் சிலையின் ஒரு சிறுபாகம் விழுந்ததில் பெண் உயிரிழந்தார்

ஈப்போவில் நேற்று நடைபெற்ற கோவிலின்  மஹா கும்பாபிஷேகத்தின் போது சிலையின் ஒரு சிறு பகுதி சிதறி விழுந்ததில் 53 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை 9.50 மணியளவில் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலின் உச்சியில் இருந்து சிலையின் அந்த  துண்டு விழுந்ததில் பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் மியோர் வாகிட்  தெரிவித்தார்.

“அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவசர சிகிச்சையின் போது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் இரண்டு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கோயில் மைதானம் வழிபாட்டாளர்களால் நிரம்பியிருப்பதையும், துண்டு விழுவதையும் காட்டுகிற இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

 

 

-freemalaysiatoday