பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அவருக்கு வீர வரவேற்பு அளிக்க கூட்டம் திரண்டதை செகம்பூட்(Segambut) நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ(Hannah Yeoh) விமர்சித்துள்ளார்.
“உலகக் கோப்பையை வெல்லும் வரை அல்லது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்காத வரையில்… இப்படி ஒரு வரவேற்பு விழா நடத்துவது என்பது வெறும் நகைச்சுவை”.
“இதுபோன்ற முட்டாள்தனமான ஒப்பனை தந்திரங்களைச் செய்ய பிரதமர் என்ன வகையான உதவியாளர்களை பணியமர்த்துகிறார்?” என்று அவர் தனது ஒரு முகநூல் பதிவில் கேட்டார்.
இஸ்மாயில் சப்ரி அமெரிக்காவிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து சுபாங் விமானத் தளத்தில் விமானத்தில் இருந்து இறங்குவதைக் காட்டும் காணொளிப் பிரதம மந்திரியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவிற்கு இயோ பதிலளித்தார்.
அவர் நிலையத்திற்குள் நுழைந்தவுடனேயே அங்கு திரண்டிருந்த கூட்டம் அவரை வரவேற்றது. அவர்கள் அவருக்கு கைதட்டி கைகுலுக்கினர்.
வெளியே, “DSIS, எங்களின் நிகறற்ற ஹீரோ” மற்றும் “DSIS தலைமையின் கீழ் மலேசியா சரியான பாதையில் செல்கிறது” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மற்றொரு கூட்டம் அவரை வரவேற்றது.
DSIS என்பது “டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி”யைக் குறிக்கிறது. அவருக்காக பாடல்கள் பாடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்”.
“எனது வருகையை பலர் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.எல்லோரையும் சந்திக்க முடிந்தது, நீண்ட பயணத்திற்குப் பிறகு என் சோர்வை மறக்க வைத்தது.”
“இன்று காலை நாங்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்தனை செய்த அம்னோ தலைமை, கெலுவர்கா மலேசியாவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி,” என்று அவர் கூறினார்.
இஸ்மாயில் சப்ரி அமெரிக்கா-ஆசியான் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டன் DC யில் இருந்தார்.