பத்திரிகையாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட பாதுகாவலர் மீது விசாரணை

இரண்டு ஊடகவியலாளர்களிடம்  கடுமையாக நடந்து கொண்டதிற்காக ஒரு பாதுகாவலர் மீது போலிசார்  விசாரணைகளை துவக்கியுள்ளனர்,

புது நகர்ப்புற மாற்றம் மையத்தில் (UTC) சனிக்கிழமையன்று The Vibes பத்திரிகையாளர்கள் இருவர் பாதுகாப்புக் காவலரால் துரத்தப்பட்டனர்.

கடவுச்சீட்டுக்காக வரிசையில் நின்ற பல நபர்களை நேர்காணல் செய்யும் போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்கவோ, முறையான அனுமதியின்றி வரிசையில் நிற்பவர்களுடன் பேசவோ அனுமதிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு காவலர் கூறியுள்ளார்.

வாய் தகராறு தவிர, பாதுகாப்பு அதிகாரி பத்திரிகையாளரின் கைபேசியை பறித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

குடியேற்றத் துறை கவுண்டர்களில் வரிசைகள் வழக்கத்திற்கு மாறாக நீண்டவை என்ற கூற்றுக்கள் குறித்து இரு பத்திரிகையாளர்களும் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

தி வைப்ஸின் கூற்றுப்படி, கோலாலம்பூர் குற்றவியல் விசாரணைத் துறையின் (CID) தலைவர் ஹபிபி மஜின்ஜி(Habibi Majinji) இதை உறுதிப்படுத்தினார்.

இது சார்பாக குற்றவியல் சட்டத்தின் 160வது பிரிவின் கீழ் விசாரணைகள் நடத்தப்படும்,

சட்டத்தை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, RM1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.