தேசியக் கூட்டமைப்பு (PN) அதன் அங்கத்தில் உள்ள எந்தக் கட்சியும் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதைத் தடுக்கவில்லை என்று அதன் தலைவர் முஹிடின் யாசின் கூறினார்.
PN இன் ஒரு பகுதியாக இருக்கும் PAS, Muafakat Nasional மூலம் அம்னோவுடனான தனது உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த விரும்பினால் தனது கட்சிக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பெர்சத்து தலைவர் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில் நடந்த தேசிய மீட்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அடிப்படையில், எந்த PN உறுப்பு கட்சியும் எந்த நடவடிக்கையும் எடுப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம், ஏனெனில் ‘penyatuan ummah’ ஒற்றுமை என்ற கொள்கையை நாங்கள் கடைபிடிக்கிறோம்.” என்றார்.
நேற்று, பாஸ் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார் உம்மா-க்கு(ummah) இடையிலான ஒற்றுமை, அரசியல் பிழைப்பு அல்ல, பாஸ் ,முவாஃபகட்(Muafakat.) வழியாக அம்னோவுடனான அதன் உறவுகளை தொடர்ந்து பாதுகாக்க அதான் காரணம் என்று கூறினார்.
PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங் (Abdul Hadi Awang) மற்றும் PAS பொதுச்செயலாளர் தகியுதீன் ஹாசன் (Takiyuddin Hassan) ஆகியோருடனான தனது சமீபத்திய சந்திப்பில், கட்சி PN இல் உறுதியாக இருக்கும் என்று கூறியதாக முஹிடின் யாசின் கூறினார்.
இறுதியில், PN மற்றும் தேசத்திற்கு எது சிறந்தது ஒன்றாக அமர்ந்து விவாதிப்போம். நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.