மலேசிய “கராத்தே கிட்ஸ்” வெற்றியை ஏன் அரசாங்கம் அங்கீகரிக்க மறுக்கிறது – குலா

விளையாட்டுத் துறையில் திறமையான ஆண்களையும் பெண்களையும், இனவாதமற்ற வகையில்  ஊக்கமளிக்கும் பொறுப்பு காணாமல் போனதாகத் தெரிகிறது. குறிப்பாக அரசாங்கமும் விளையாட்டு அமைச்சகமும் கவனம் செலுத்த வேண்டும்.

போட்டித்தன்மையின் உணர்வைக் கவனிக்கும் திறன் மற்றும் அதற்கேற்ப நிதிகளைச் சேர்ப்பது, திறமையான விளையாட்டு அமைச்சகத்தின் தனிச்சிறப்பாகும்.

இதனடிப்படையில், “பிரான்சில் நடந்த போட்டியில் தங்கம் உட்படப் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்த கராத்தே கிட்ஸ்” என்று பெயரிடப்பட்ட தனியார் மலேசியக் கராத்தே அணியின் அற்புதமான வெற்றியை அரசு முறைப்படி அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற கராத்தே ஹெவிவெயிட்களை உள்ளடக்கிய 12 நாடுகள் போட்டியிட்ட இந்தப் போட்டியில் ஒன்பது பேர் கொண்ட அணியில் ஒவ்வொருவரும் ஒரு பதக்கத்தை வென்று  கொண்டு வந்துள்ளனர்.

விளையாட்டு அமைச்சகம், அரசு நிறுவனங்கள் அல்லது தனியார் அமைப்புகளின் எந்த உதவியும்  இல்லாமல் இந்த அற்புதமான சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.  அவர்களின் வெற்றியை நாம் கண் திறந்து பார்க்க வேண்டும்.

இவர்களுக்கு, ஒரு துருக்கிய விமான நிறுவனம், கடனில் பறக்க அனுமதித்ததன் மூலம், இந்த அணிக்கு அந்தப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த விளையாட்டு வீரர்களின் வெற்றி மனப்பான்மை, உறுதிப்பாடு மற்றும் சிறந்து விளங்கும் இவர்களுக்கு அரசாங்கம் தகுந்த அங்கீகாரம்  வழங்குவது   நியாயமானது, அதே நேரத்தில் விளையாட்டு அமைச்சகம் அவர்கள் மேலும் உயர்வடைய உதவும் வழிகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.

அமெரிக்காவிலும் இத்தாலியிலும் போட்டியிடுவதற்கான அவர்களின் கனவுகளுக்கு அவர்கள் இன்னும் நிதி திரட்ட முயற்சிப்பதால் அவர்களுக்கு உதவுவதையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும். உண்மையில், அவர்களின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, பிரான்சில் நடக்கும் போட்டிகளுக்கான செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

மேலும், வெற்றிபெறும் குழந்தைகள் நம் தேசத்திற்குப் புகழைக் கொண்டுவந்து மற்ற மலேசியர்களுக்கு அவர்கள் முன்னுதாரணமாக இருப்பார்கள்.

எதிர்காலத்தில் எந்தவொரு விளையாட்டு வீரர்களும் வாய்ப்புகளை இழக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, விளையாட்டுத்துறை அமைச்சகமானது பல்வேறு விளையாட்டுத் துறைகளில் உள்ள திறமைகளை அடையாளம் காண்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். இதன் மூலம் நாட்டில் விளையாட்டுத்துறையில் தார்மீக வளர்ச்சி உருவாகும்.

எம்.குல சேகரன், நடாளுமன்ற உறுப்பினர் ஈப்போ பாராட்