தகவல் கசிவு: புக்கிட் அமான் விசாரணையைத் தொடங்கியது

புக்கிட் அமான் வணிகக் குற்றத் துறை (Commercial Crime Department) புத்ராஜெயாவின் MyIdentity தரவுத்தளத்திலிருந்து மில்லியன் கணக்கான பதிவுகளை இயங்கலையில் (ஆன் லைன்) விற்க முன்வந்தது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஒரு அறிக்கையில், CCID இயக்குனர் கமருடின் முகமட் .டின்(Kamarudin Md Din), இந்த கோரிக்கை குறித்து காவல்துறைக்கு அறிக்கை கிடைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியதுடன், பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

“மலேசியர்களின் தரவு இயங்கலையில் விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டைப் பற்றி இணையதளங்களால் வெளியிடப்பட்ட பல கட்டுரைகளைக் குறிப்பிட்டு, தேசிய பதிவுத் துறையிடமிருந்து தரவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும், ஒரு அறிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது என்பதை CCID உறுதிப்படுத்தியது”.

“இது சர்பாக  ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று அவர் புதன்கிழமை கூறினார்.

இந்த விவகாரம் குறித்து எந்தவித ஊகங்களையும் செய்ய வேண்டாம் என்றும் கமருதீன் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

அன்மையில்  புத்ராஜெயாவின் MyIdentity தரவுத்தளத்தில் இருந்து மில்லியன் கணக்கான பதிவுகள் ஆன்லைனில் விற்கப்பட்டதாகக் கூறப்பட்டது .

Actifedot என்று மட்டுமே அறியப்படும் விற்பனையாளர், ஏப்ரல் 29 அன்று, breached.co எனப்படும் ஹேக்கர் மன்றத்தில் தரவுக்கான விளம்பரத்தை வெளியிட்டார்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து MyIdentity பயனர்களின் தனிப்பட்ட தரவு விற்கப்படுவது இது இரண்டாவது முறையாகும் .