கிள்ளான் பகுதியில் உள்ள சென்டர் பாயிண்ட் கட்டிடத்திற்கு 18.05.2022 அன்று தனியாக நடந்து சென்றபோது, சாலையோரத்தில் சுற்றும் நபர் அந்த பெண்ணிடம் கொள்ளையடிக்க முயன்றதால் அவர் காயமடைந்ததாக கிளாங் உத்தரா மாவட்ட காவல்துறை தலைவர் விஜய ராவ் சமச்சுலு தெரிவித்தார்.
நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் சம்பவத்திற்குப் பிறகு புகார் செய்தார், தற்போது அவர் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேகத்திற்குறிய அந்த நபர் பெண் கீழே விழும் வரை தள்ளிவிட்டு கொள்ளையடிக்க முயன்றதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் தப்பியோடும்பொழுது அந்த பெண்ணின் முகம் மற்றும் தலையில் சரமாரியாக குத்தினார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த விவரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்குறிய நபரை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும், தற்போது அவரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும் ராவ் கூறினார்.
“சந்தேகத்திற்குறிய அந்த நபர் வீடு இல்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர், மெல்லிய உடல், மந்தமான தோல்,40 வயதைத்தக்க தோள்களை எட்டும் அளவு நீண்ட முடி கொண்டவர்”.
“சம்பவத்தை நேரில் அல்லது இவரைப்பற்றி தெரிந்த பொதுமக்கள் எங்கள் விசாரணையில் உதவ அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 393-ன் கீழ் திருட்டு முயற்சிக்காக விசாரிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இதற்கிடையில், மற்றொரு பத்திரிகையின் அறிக்கையின்படி, சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசியால் பெண்ணின் தலையில் 20 முறை அடித்ததாகவும், அவரது கண்களில் குத்தி காயங்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
FMT