நாட்டில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை வெளியிடுமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் நிர்வாகத்தை ஈப்போ பாரத் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
“கோழிப்பண்ணை தற்காலிகமாக மூடப்பட்டது மற்றும் கோழி விற்பனையாளர்கள் வேலைநிறுத்தம் ” செய்வதைப் பற்றிய செய்தியை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.
“ஈப்போவில், நான் சந்தைக்குச் சென்றபோது, அரசு ஒரு கிலோவுக்கு RM8.90 உச்சவரம்பு விலையாக நிர்ணயித்த பிறகு லாபம் ஈட்ட முடியாததால் வேலைநிறுத்தம் செய்வதாகக் கூறிய விற்பனையாளர்களைச் சந்தித்தேன்”.
“இந்த விலை, அவர்களின் செலவு விலைக்கு சமம் என்பதால், இந்த விலையில் வணிகம் செய்வதில் அவர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்”.
எனவே, உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமான பிரச்னை என்பதால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மானியங்களை உடனடியாக வழங்க வேண்டும். அமைச்சர் திறமையற்றவர் என்பதற்காக, தாமதிக்க முடியாது,” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிலைமை தீவிரமடைவதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை அவர் கேட்டுக் கொண்டார்.
“உலக நிகழ்வுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையின் விளைவுகளை நாம் விரைவில் உணர வேண்டியிருக்கும் என்பதை அரசாங்கம் அறிந்து கொள்ள வேண்டும், எனவே அரசாங்கத்தின் திட்டம் என்ன?”
“உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு வழிமுறை இருக்க வேண்டும். நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் உணவைச் சார்ந்து இருக்கிறோம், இது ஒரு வருடத்திற்கு 50 பில்லியன் ரிங்கிட் ஆகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
உள்ளூர் விவசாயத்திற்கு அழுத்தம்
நாட்டில் போதுமான நிலம் மற்றும் விவசாயத்திற்கு நல்ல வானிலை இருந்தபோதிலும், நகர்ப்புற விவசாயம் மற்றும் செங்குத்து விவசாயத்திற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இவ்வாறாக உள்ளது என்று அவர் கூறினார்.
“நம் உணவுப் பிரச்சினைகளை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள அதிகளவிலான மக்களை ஏன் விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கக்கூடாது? இந்தத் துறையில் தொழில் தொடங்க மானியங்கள் மற்றும், விவசாயத்தில் திறன்களை மேம்படுத்த இலவசப் பயிற்சி வழங்குவது மற்றும் நிலம் ஒதுக்குவது போன்றவற்றை ஏன் அறிமுகப்படுத்தக்கூடாது?” என்பதுதான் கேள்வி.
பேராக் தலைநகரில் நகர்ப்புற விவசாயத் திட்டத்தைத் தொடங்கிய ஈப்போ மேயர் ருமைசி பஹாரின்(Rumaizi Baharin) நடவடிக்கையை முன்னாள் மனிதவள அமைச்சர் பாராட்டினார்.
“வீட்டில் ஒரு சிறிய தொட்டியில் மிளகாய் நடவு செய்தாலும் அதிகமான மக்கள் பங்கேற்கும் வகையில் இது நாடு முழுவதும் செய்யப்பட வேண்டும்”.
“உணவுத் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாவிட்டால், குறைந்த வருமானம் கொண்ட மலேசியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள், மேலும் அது ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கும் வழிவகுக்கும்,” என்று அவர் எச்சரித்தார்.