“மக்களிடமிருந்து அழைப்பு வந்தால்” தாசெக் கெலுகோர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் பொதுத் தேர்தலில் நிற்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறுகிறார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எம்ஏசிசியின் முன்னாள் தலைமை ஆணையர் தாஸுல்கிபிலி அஹ்மட்.
“உண்மையில், நான் அரசியலில் ஈடுபடவில்லை, எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராகவும் இல்லை.
“இருப்பினும், தாசெக் கெலுகோர் மக்களிடமிருந்து என்னைப் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அந்த தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று ஒரு உதவி வழங்கவும் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் தெரிவித்ததாக பத்திரிகை வெளியிட்டுள்ளது.
“இருப்பினும், நான் பொதுத் தேர்தலில் ஈடுபடுவேனோ இல்லையோ, இது எனது சொந்த ஊர் என்பதால் தாசெக் கெலுகோர் பகுதியில் வசிப்பவர்களுக்கு நான் தொடர்ந்து சேவை செய்வேன்.”
இங்குள்ள மஹாத் தஹ்ஃபிஸ் அஸ் சியாஃபி மாதாஸ் முன் பிரபல போதகர் உஸ்தாஸ் அப்துல்லா கைரி யுஏகே உடன் துல்கிஃப்லி நிகழ்ச்சியை நடத்தினார்.
நிகழ்ச்சியில், தொகுதியைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 1.2 டன் கானாங்கெளுத்தி மீன்களை மக்களுக்கு வழங்கினார்.
உள்ளூர் மக்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் 1 கிலோ அளவு பைக்குகளில் மீன் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“தற்போது மீன் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகளின் சுமையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைப்பதே திட்டத்தின் முழு நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
“இந்த பங்களிப்பு எனது அரசு சாரா நிறுவனத்திடம் என்ஜிஓவிடம் இருந்து வந்தது. கடவுள் நாடினால், எனது தன்னார்வ தொண்டு நிறுவனம் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தும்,குறிப்பாக தாசெக் கெலுகோரில் நடத்தி மக்களின் சுமையை குறைக்கும் உதவும் என்று அவர் கூறினார்.
அவரது தந்தை தாசெக் கெலுகோருக்குச் செல்வதற்கு முன்பு, இங்கு அருகிலுள்ள கேபாலா படாஸில் பிறந்தார் என்று அவர் கூறினார்.
“ஆதலால் இந்த இடம்தான் எனக்கும் சொந்த ஊர். அதனால்தான் இங்கு வசிப்பவர்களின் சுமையை குறைக்க நான் காலத்தில் இறங்க நினைக்கிறன் என்று அவர் கூறினார்.
14வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை அமைத்த பிறகு, 2016 ஆகஸ்டு 1ஆம் தேதி எம்ஏசிசி தலைவராக தாஸுல்கிபிலி நியமிக்கப்பட்டார் மற்றும் மே 2018 இல் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
FMT