இறந்தவர்களின் உடல்களை கையாளுவதற்க்கு லஞ்சம் வாங்கிய 2 மருத்துவமனை ஊழியர்கள் கைது – எம்ஏசிசி 

இறந்த நோயாளிகளின் உடல்களை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தங்களுக்கு ஈடாக ஒரு தனிநபரிடமிருந்து ரிம30,000 லஞ்சம் கேட்டு வாங்கியதாக சந்தேகப்படும் இரண்டு மருத்துவமனை ஊழியர்களை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் எம்ஏசிசி  கைது செய்துள்ளது.

அந்த 42 மற்றும் 40 வயதுடைய இருவரின் வாக்குமூலங்களை பெற்ற  பின்னர் நேற்று மாலை 4.45 மணியளவில் சிலாங்கூர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம்  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் சந்தேகத்திற்குரிய நபர்கள், 2018 முதல் 2021 வரை தனிநபரிடம் இருந்து ஒரு இறந்த உடலுக்கு ரிம300 வீதம் லஞ்சம் கேட்டதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் எம்ஏசிசி தலைவர் அலியாஸ் சலீம், இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 17(ஏ) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இருவரும் நாளை ஷா ஆலம் குற்றவியல் நடுவர்கள் நீதிமன்றத்திற்கு மறுஆணைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறினார்.

 

FMT