ரிம20,000 கடனை அடைத்த தொழிலதிபருக்கு நன்றி – ‘கராத்தே கிட்ஸ்’

சர்வதேச போட்டிக்காக பிரான்ஸ் சென்றதற்காக மேற்கொண்ட பயணச் செலவுகளை, ஏற்றதற்காக தொழிலதிபர் வின்சென்ட் தான் – க்கு “கராத்தே கிட்ஸ்” நன்றி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிரெஞ்சு கராத்தே சர்வதேச அளவில் ஒரு தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்ற அணிக்கு 25.5..22- அன்று   வின்சென்ட் தான் விருந்தளித்தார்.

‘தான்’  ரிம20,000க்கான காசோலையை உள்ளூர் பயண முகவர் நிறுவனத்திடம் கொடுத்து “முதலில் பயணம் செய்யுங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்” என்று அனுமதித்தார்.

“இந்தச் செயலுக்காக பெர்ஜெயா கார்ப்பரேஷன் நிறுவனர் வின்சென்ட் தானுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று தனியார் குழுவின் செய்தித் தொடர்பாளர் திவாஷினி கிரிஷ் தேவ் நாயர் கூறினார்.

தான், எங்களுடைய குழிவினருக்கு சில சிறந்த அறிவுரைகளை வழங்கினார், அது அவர்களின் சாதனையைப் பற்றி பெருமிதம் கொள்ள வைத்ததாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச விளையாட்டு அரங்கில் மலேசியாவிற்கு அதிக பெருமைகளை கொண்டு வருவதற்கும், சிறப்பாக செயல்படுவதற்கும் இது அதிக உந்துதலாகவும் அணியை ஊக்குவிக்கும்  விதமாகவும் அமையும் என்று அவர் தெரிவித்தார்.

MIC இன் ரிம10,000 பங்களிப்பிற்காகவும், மற்றும் எங்கள்  மீது நம்பிக்கை வைத்து தங்களால் இயன்றதை வழங்கியதற்காகவும் திவாஷினி நன்றி தெரிவித்தார்.

பணத்தை எதிர்பார்த்து இருந்த குழுவின் வெற்றியைப் பற்றியும், பயணத்தை மேற்கொண்டதில் பெற்ற கடனைப் பற்றியும் எஃப்எம்டி அறிக்கையைத் பார்த்து படித்துவிட்டு தான் உதவிக்கு வந்தார், என்று அவர் கூறினார்.

இது அவரது தனிப்பட்ட தொண்டு நிறுவனமான பெட்டர் மலேசியா அறக்கட்டளை BMFன் பங்களிப்பு.

மே 8 அன்று நடந்த பிரெஞ்சு கராத்தே சர்வதேச போட்டியில், மலேசியாவின் சர்வதேச ஒகினாவன் ஷோரின்-ரியூ செய்-பு-கான் கராத்தே டோ சங்கத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள், நாட்டின் முதல் பதக்கம் உட்பட, தலா ஒரு பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்தனர். உலகளாவிய கராத்தே போட்டியில் மலேசியாவிற்கான  முதல் தங்கம் இதுவாகும்.

நாட்டின்  மலேசிய கராத்தே கூட்டமைப்புடன்,  ஆளும் குழுவுடன் இணைக்கப்படாததால், போட்டியில் பங்கேற்பதற்காக நிதி திரட்டுவதில் குழு சிரமத்தை எதிர்கொண்டதாக முன்னர் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

FMT