நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த ஜுரைடாவின் துறையை பிரதமர் கையாளலாம் – டிஏபியின் ஸ்டீவன்

ஜுரைடாவுக்கு பதிலாக புதிதாக ஒருவர் தேவையில்லை. பதிலாக, பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை தோட்டத் தொழில்கள் மற்றும் மூலப்பொருள் அமைச்சராகப் பொறுப்பேற்குமாறு  வலியுறுத்தியுள்ளார், டிஏபியின் ஸ்டீவன் சிம்.

வியாழன் அன்று புக்கிட் மெர்தாஜாம் எம்.பி. ஜூரைடா  ராஜினாமா செய்வதாக அறிவித்ததில் இருந்து காலியாக உள்ள மந்திரி பதவியை நிரப்ப அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இப்போது போட்டியிடுகின்றன என்று ஒரு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

“தற்போதைய நாடாளுமன்றக் காலம் முடியும் வரை இஸ்மாயில் ஊதியம் இன்றி பதவியை ஏற்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

புதிய அமைச்சருக்கு தனது அணியை ஒழுங்கமைக்க பல மாதங்கள் தேவைப்படும் என்பதால் புதிதாக ஒருவரை தேர்ந்தெடுப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.

புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இஸ்மாயில் அந்தப் பதவியைப் பெறுவதற்கு வேறு நான்கு காரணங்களை அவர் கூறுகிறார்.

பிரதமரின் தூதர்கள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 68 அமைச்சர்களைக் கொண்ட இஸ்மாயிலின் “மாபெரும்” அமைச்சரவையின் அளவைக் குறைக்கும் என்று சிம் கூறினார்.

“குறிப்பாக தொற்றுநோய் மற்றும் சமீபகாலமாக கோழி வளர்ப்பு மானியங்களை நிர்வகிப்பது முதல் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறியதால், மேலும் வீண் சிலவுகள் வேண்டாம்” அவர் கூறினார்.

“ஐந்து வருடங்களில் தோட்டக் தொழில் மற்றும் மூலப்பொருள்  அமைச்சரின் பங்கு மூன்று தடவைகள் மாற்றமடைந்துள்ளது, இது கைத்தொழில் மற்றும் அமைச்சுக்கே பாதகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.”

“இஸ்மாயில் பொறுப்பேற்றால், அது அமைச்சுக்குள் வளர்ச்சியை அதிகரிக்கும், மேலும் கொள்கை அல்லது நிறுவன கட்டமைப்பின் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செயல்படுத்தப்பட வேண்டியதில்லை,” என்று அவர் கூறினார்.

பிரதமரால் அமைச்சுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கவும், மலேசிய பெருந்தோட்டத்துறை புத்துயிர் பெறவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் பிஎன் மற்றும் பெர்சத்து தலைமையிலான பெரிக்காதான் நேசனல் பிஎன் ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் போட்டியை நிறுத்துவது மற்றொரு காரணம் என்று சிம் கூறினார்.

“இரு கட்சிகளுக்கு இடையே நடந்து வரும் அதிகாரப் போட்டி இரகசியமானது அல்ல, இஸ்மாயில் புதிய அமைச்சரை நியமிக்காவிட்டால், அந்த பதவிக்கு போட்டியிடும் அரசாங்கத்தில் உள்ள எந்தக் கட்சியையும் அவர் புண்படுத்த மாட்டார்,” இது அரசாங்கத்தில் உள்ள மற்ற கூறு கட்சிகளையும் நாட்டை சிறப்பாக ஆள்வதில் கவனம் செலுத்த நிர்ப்பந்திக்கும் என்று அவர் கூறினார்.

பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் ஜூரைடாவுக்குப் பதிலாக புதிய அமைச்சரை நியமிக்கவில்லையெனில் பொதுமக்களின் பணத்தை மிச்சப்படுத்தும், என்று சிம் மேலும் கூறினார்.

மே 26 அன்று, அம்பாங் எம்.பி. ஜுரைடா, பார்ட்டி பாங்சா மலேசியா பிபிஎம் இல் சேர பெர்சதுவிலிருந்து வெளியேறுவதாகவும், அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஜுரைடாவின் முன்னோடியாக இருந்த கைருடின் அமன் ரசாலி, அவர் அமைச்சராக இருக்க வேண்டும் என்று கூறியபோது, ​​பெர்சாத்து இளைஞர் தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மட் கமால், அவரது அமைச்சரவைப் பதவி பெர்சத்துவில் உள்ள ஒருவருக்குத் தர வேண்டும், ஏனனில் இது அவரது கட்சிக்கான “ஒதுக்கீட்டின்” ஒரு பகுதியாகும்,என்று கூறினார்.

மற்றவர்கள் அவருடைய இரண்டு துணை மந்திரிகளில் ஒருவரான வில்லி மோங்கினையும் அமைச்சராக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். எம்சிஏவின் வீ ஜெக் செங் மற்றொரு துணை அமைச்சராக உள்ளார்.

எனினும், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், ஜுரைடா தற்போதைக்கு அமைச்சரவையில் நீடிப்பார் என்று தெரிவிர்த்துள்ளார்.

FMT