விற்பனை மற்றும் சேவை வரியில் விலக்கு அளிக்கப்படாவிட்டால், சுமார் 80,000 புதிய கார் ஆர்டர்கள் பாதிக்கப்படும் என்று மோட்டார் நிதிச் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
கோவிட்-19 கட்டுப்பாட்டின் காலத்தில் வழங்கப்பட்ட விலக்கு ஜூன் 30 அன்று முடிவடைகிறது.
சுமார் 80,000 கார்கள் பதிவு செய்யப்பட்டு டெலிவரிக்காகக் காத்திருக்கின்றன, என்று மலேசியாவின் மோட்டார் மற்றும் கடன் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் டோனி கோர் தெரிவித்துள்ளார்.
“பல கார் வாங்குபவர்கள் இன்னும் தங்கள் ஆர்டர்களைப் பெறவில்லை, சிலர் ஐந்து மாதங்கள் வரை காத்திருக்கிறார்கள். ஜூன் இறுதிக்குள் கார்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், இந்த கார் பதிவுகளால் சுமார் 80,000 கார்களுக்கு வரி விதிக்கப்படும்,” என்றார் அவர்.
ஜூன் 30 வரை உள்நாட்டில் ஒன்று சேர்த்த செய்யப்பட்ட கார்களுக்கு முழு வரி விலக்கும் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு 50சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
புதிய கார் விலை பட்ஜெட்டை விட அதிகமாக இருந்தால் சில வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்யலாம் மற்றும் விற்பனை இழப்பு மோட்டார் துறையின் மீட்சியை பாதிக்கும் என்று அவர் பதிக்கையிடம் கூறினார்.
புதிய பதிவு செய்யப்பட்ட குறைவான பழைய கார்கள் வர்த்தகம் செய்யப்படுவதால், பயன்படுத்திய கார் சந்தையும் ஒரு பின் விளைவை சந்திக்கும். புதிய கார்களை வாங்குபவர்களில் 67சதவீததிற்கும் அதிகமானோர் பழைய கார்களையே வர்த்தகம் செய்கின்றனர்.
கூட்டமைப்பு மற்றும் பிற மோட்டார் தொழில் குழுக்கள் விற்பனை மற்றும் சேவை வரி விலக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளதாக கோர் கூறினார்.
FMT