ரபிசி மீது முன்னாள் சபுரா தலைமை நிர்வாக அதிகாரி வழக்குத் தொடர்ந்தார்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட PKR துணைத் தலைவர் ரபிசி ரம்லி(Rafizi Ramli) மீது, Sapura Energy Bhd (SEB) பிணையெடுப்பு விவகாரத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நேற்று(1/6), ஒரு வலைப்பதிவு இடுகையில், முன்னாள் பாண்டன் எம்.பி( Pandan MP), மே 11 அன்று முன்னாள் சபுரா எனர்ஜி தலைமை நிர்வாக அதிகாரி ஷாரில் ஷம்சுதீனுக்காக செயல்படும் வழக்கறிஞர்களால், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபுரா எனர்ஜியை பிணையில் எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதோடு தொடர்புடைய தனது அறிக்கைகளை நீதிமன்றத்தில் தற்காக்க  தான் தயாராக இருப்பதாக இந்த மூத்த அரசியல்வாதி மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னாள் அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தி நொடித்தி போகும் நிலையில் இருந்த சபுரா எனர்ஜி என்ற பட்டியலிடப்பட்ட அரசங்க தரப்பு நிருவனத்தை காப்பாற்ற வேண்டும் என்று நஜிப் கருத்து தெரிவித்தார்.

பொது மக்களின் பணத்தை கொண்டு இதை செய்வதை ரபிசி கடுமையாக விமர்சித்தார்.  அதன் சார்பாக இந்த வழக்கு.

இதற்கு முன்பு National Feedlot Corporation, 1MDB, Majlis Amanah Rakyat, Tabung Haji and Lembaga Tabung Angkatan Tentera ஆகியவற்றைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட 14 நீதிமன்ற வழக்குகளில் தான் பெற்ற  சட்ட வெற்றிகளை ரபிசி  குறிப்பிட்டார்.

பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவே எனது வாக்குமூலங்கள் வெளியிடப்பட்டதால், நீதிமன்றத்தில் எனது அறிக்கைகளை நிலைநிறுத்துவதற்கான நிலைப்பாட்டை நான் எடுக்கிறேன்.

“பொது நிறுவனங்களில் (Permodalan Nasional Berhad, Employees Provident Fund, Retirement Fund Incorporated, Tabung Haji மற்றும் பலர்) பொது முதலீடுகளுக்குத் தேவையான நிர்வாகத்தை நிறைவேற்றுவதற்கான மக்களின் முதலீட்டை உறுதி செய்வதற்கான எங்கள் முயற்சிகளில் ஷாரிலின் வழக்கின் விசாரணை ஒரு முக்கியமான மைல்கல்”.

பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் மக்களின் பணத்தின் பெரிய முதலீடுகளை உள்ளடக்கிய ஒரு பொருளாதார கட்டமைப்பில், இந்த நிறுவனங்கள் பெரும் இழப்புகளை சந்திக்கும்போது மக்களின் சேமிப்பு இழப்பைத் தடுக்க பொது முதலீடுகளுக்கு தேவையான நிர்வாகம் இறுக்கமாக இருக்க வேண்டும்” என்று ரஃபிஸி எழுதினார்.

அந்த பதிவின்படி, ரபிசி சட்ட நிறுவனமான Ranjit Singh & Yeoh சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித் சிங்( Ranjit Singh) ரபிசியை பிரதிநிதிப்பார்.