டாக்காவில் சரவணனை ‘எதிர்ப்பு பதாகைகளுடன்’ வரவேற்றனர் சில தரப்பினர்

தொழிலாளர் ஆட்சேர்ப்பு தொடர்பான மலேசியா-வங்காளதேச கூட்டு செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணனை வங்காளதேசத்தின் டாக்காவில் போராட்டக்காரர்கள் குழு இன்று சந்தித்தது.

மலேசியா கோரியபடி தொழிலாளர்களை வழங்க 25 முகவர்களை மட்டுமே அனுமதிக்கும் அதன் முடிவில் கூட்டுக் குழு உறுதியாக இருந்தால், வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 1,300 ஆட்சேர்ப்பு முகர்கள் குழு போராட்டத்தை நடத்துவோம் என்று மிரட்டியதை அடுத்து இது வெளியாகியுள்ளது.

“கூட்டு நிறுவன எதிர்ப்பு இயக்கம்” என்று தங்களை அழைத்துக் கொண்ட அவர்கள், 25 முகவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதற்கு சுமார் 18,000 ரிங்கிட் வசூல் செய்வதை காணமுடிகிறது, இது தேவைப்படுவதை விட இரண்டு மடங்கு அதிகம்.

எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், பங்களாதேஷின் புலம்பெயர்ந்தோர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் முன் கையில் பல்வேறு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“மற்ற 13 மூல நாடுகளைப் போலவே, அனைத்து செல்லுபடியாகும் வங்காளதேச ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கும் மலேசியா வேலைச் சந்தையைத் திறக்க எங்கள் அமைச்சருடன் நீங்கள் ஒரு வெற்றிகரமான சந்திப்பை நடத்த விரும்புகிறோம்,” என்று அமைச்சர் சரவணனை வரவேற்ற பெரிய பதாகைகளில் குறிப்பிட்டிருந்தது.

மற்ற பதாகைகளில், “25  கூட்டு நிறுவனங்கள் இல்லை”, 25 முகவர்களிடம் உள்ள தொழிலாளர்களைஅனுதிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது .

பங்களாதேஷ் சர்வதேச ஆட்சேர்ப்பு முகவர் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் ஷமீம் அகமது சௌத்ரி நோமன், தொழிலாளர்களை அனுப்ப 25 முகவர்களை மட்டுமே வைத்திருக்க மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த “நியாயமற்ற” முடிவை பங்களாதேஷ் அரசாங்கம் நிராகரிக்கும் என்று அவர்கள் முழுமையாக நம்பியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இதை வேறு எந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் மூல நாடும் ஏற்கவில்லை என்றால், சரவணன் ஏன் வங்கதேசத்தின் மீது இதை திணிக்க முயற்சிக்கிறார்? இது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியாவும் வங்காளதேசமும் டிசம்பர் 19 அன்று கோலாலம்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்பது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இருப்பினும் விவரங்கள் மறைக்கப்பட்டன.

சரவணன் சமீபத்தில் பங்களாதேஷ் தொழிலாளர்களை மலேசியாவிற்கு அனுப்புவதில் ஈடுபட்டுள்ள ஆட்சேர்ப்பு முகவர்களின் எண்ணிக்கையின் முடிவு புத்ராஜெயாவிடம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

FMT