விலைவாசி உயர்வால் வாடிக்கையாளர்கள் குறைவதாக கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தைகளின் விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பசார் செரி செத்தியாவில் செயல்பட்டு வரும் கோழி விற்பனையாளர் மஹானோம் ஹுசின், செய்தியாளர்களிடம் தனது வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் கொள்முதலை பாதியாக குறைத்துக்கொண்டதாக கூறினார்.
“விலைகள் மிக அதிகம்,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோழிக்கறி விலை ஏறுமுகத்தில் உள்ளது.
மற்றொரு கோழி விற்பனையாளரான ரொபையா அமீர், விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார், அரசாங்கம் நிர்ணயித்த உச்சவரம்பு விலை ரிம8.90 என்றாலும், கிலோ ஒன்றுக்கு ரிம11.50 விற்கப்படுவதாக அவர் கூறினார்.
அதிக செயல்பாட்டுச் செலவுகள் இருப்பதால் தன்னால் லாபம் ஈட்ட முடியவில்லை என்று அவர் கூறினார்.
மீன் விலையும் உயர்ந்துள்ளது.
வானிலை காரணமாக மீன் விலை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் ஏற்ற இறக்கமாக இருந்தது, ஆனால் கடந்த சில மாதங்களில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது, என்று கடல் உணவு விற்பனையாளர் சதீஷ் குமாரின் கூறியுள்ளார்.
“உதாரணமாக, செஞ்சாரு , ஒரு கிலோ ரிம10 மற்றும் ரிம11 இடையே விற்கப்படுகிறது, ஆனால் தற்பொழுது ரிம20 முதல் ரிம22 வரை உயர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
தனது வாடிக்கையாளர்களில் சிலர் தாங்கள் செலவழித்த தொகையில் பாதிக்கும் குறைவாகவே செலவளிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
சிறு விற்பனையாளர்களாகிய நாங்கள் உயர் மார்க்கெட்டுகள், இரவு சந்தைகள் மற்றும் உழவர் சந்தைகளில் இருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக மற்றொரு வர்த்தகரான இப்ராஹிம் அப்துல் ரஹ்மான் கூறினார்.
பல தசாப்தங்களுக்கு முன்னர், “அனைவரும் மாட்டிறைச்சி அல்லது கோழியை வாங்க விரும்பும் எந்த நேரத்திலும் கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தைகளுக்கு வருவார்கள், ஆனல் தற்பொழுது இந்த நிலைமை மாறிவிட்டது” என்று அவர் கூறினார்.
ஏப்ரலில் பதிவு செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களிலும் 89 சதவீதம் விலை அதிகரித்த பிறகு, நுகர்வோர் தங்கள் வயிற்றை நிரப்ப அதிக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை உருவாகும் என்று சமீபத்தில் புள்ளியியல் துறை கூறியிருந்தது.
M40 பிரிவில் தான் இருப்பதாகக் கூறிய ஹஃபிஸா பஹ்ரின், தன கஷ்டத்தை உணர்கிறதாக கூறினார்.
இருப்பினும், நான் பதப்படுத்தப்பட்ட உணவை காட்டிலும் புதிய கோழியை விரும்புகிறேன், ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவு ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
“நான் அதிகம் சம்பாதிக்கவில்லை, அதனால் என்னைப் போன்றவர்கள் நெருக்கடியில் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
செரி கெம்பாங்கனில் உள்ள சந்தைக்கு அடிக்கடி வரும் உணவக உரிமையாளர் ஹோ ஹெங், கோழி மற்றும் காய்கறிகளின் விலைகள் உயர்வதால், தனது வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் தனக்கு அதிக சுமையை ஏற்படுத்தவில்லை என்றார்.
“ஆனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சுமை மிகப்பெரியது,” என்று அவர் கூறினார்.
FMT