மருந்து தட்டுப்பாடு இருப்பதாக வெளியான செய்திகளை சுகாதார அமைச்சகம் இன்று மறுத்துள்ளது.
ஒரு அறிக்கையில், மருந்து விநியோக மூத்த இயக்குனர் நோர்ஹலிசா ஏ ஹலிம் (Pharmaceutical Services senior director Norhaliza Halim), பாராசிட்டமால் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்ட மருந்துகளின் தேவை சமீபத்தில் அதிகரித்துள்ள போதிலும், இருமல் மற்றும் சளிக்கான மருந்துகளுடன், விநியோகங்கள் இன்னும் கிடைக்கின்றன என்று கூறினார்.
“தற்போது, பல்வேறு வணிகச் சின்னங்களின்(brands) கீழ் பல தயாரிப்புகளுக்கு மாற்றுகள் உள்ளன, ஆனால் ஒரே மாதிரியான செயல்பாடுகள் இருப்பதால், முழுமையான விநியோக இடையூறுகளை எதிர்கொள்ளும் தயாரிப்புகள் எதுவும் இல்லை”.
“உற்பத்தியாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் திறனை அதிகரித்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
மலேசிய மருந்துத் தொழில்கள் அமைப்பு, மலேசியாவின் மருந்து சங்கம் மற்றும் மலேசிய மருந்து சப்ளையர்கள் சங்கம் ஆகியவற்றுடன் நேற்று முன் தினம்(2/6) தொடர்பு கொண்ட பின்னர் சுகாதார அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்ததாக நோர்ஹலிசா கூறினார்.
மலேசிய மருத்துவ சங்கம் , குறிப்பிட்ட சில மருந்துகளில் தட்டுப்பாடு இருப்பதால் , பதட்டம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்தியது.
மருத்துவச் செய்தி இணையதளமான CodeBlue , சீனாவில் கோவிட்-19 முடக்கத்தால் மருந்து மற்றும் மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக அறிவித்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாகவும் தளவாட இடையூறுகள் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறியது.