சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத அரிய நோயாளிகளுக்கு அரசு உதவும் – நூர் அஸ்மி

அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற உதவுவதற்காக ஒரு நிதியை உருவாக்குவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்தார்.

நான்கு வயதிலிருந்தே அரிதான தசை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவனான சஃபியா ஐஸ்யா சஹ்ருல் அசிரஃப் ஷாருதீனுக்கு நன்கொடைகளை வழங்கிய நூர் அஸ்மி, அரிதான நோய்களுக்கான சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது ஆதலால் நோயாளிகளின் குடும்பங்கள் பொதுவாக அதை ஏற்க இயலாத நிலையில் உள்ளதாக கூறினார்.

சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத நோயாளிகள் பற்றிய அறிக்கைகள் கிடைத்தால், அரசு உதவி செய்யும் ” செலவில் விலையுயர்ந்த மற்றும் பெற கடினமாக இருக்கும் மருந்துகள் இதில் அடங்கும்,” என்று நூர் அஸ்மி கூறியுள்ளார்.

சஃபியா ஐஸ்யாவின் தாயார், இல்லத்தரசி சியாமிமி அதிரா சனுசி,வயது  30, அவரும் அவரது குடும்பத்தினரும்,  நோயாளியான தனது ஒரே குழந்தையின் இறுதிவிருப்பங்களை நிறைவேற்றும் முறைச்சியை மேற்கொண்டுள்ளனர்.

பனியில் விளையாடும் சஃபிய்யா ஐஸ்யாவின் விருப்பத்தை நிறைவேற்ற வடக்கு மண்டல புற்றுநோய் குழந்தைகள் நண்பர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் சிலாங்கூரில் உள்ள ஐ-சிட்டிக்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்வதாக அதன் தலைவர் மஸ்னா தாயிப் கூறினார்.

சஃபிய்யா ஐஸ்யா ஏற்கனவே இரண்டு அறுவை சிகிச்சைகளை சஃபிய்யா மேற்கொண்டுள்ளார், “என் மகள் இன்னும் ஆறு மாதங்கள் வாழ வேண்டும் என்பதை விதியாக ஏற்றுக்கொள்கிறோம்” என்று சிறுமியின் தாய் கூறினார்.

FMT