கீர் தோயோ ,மீண்டும் அரசியலுக்கு வரத் தேவையில்லை, திரும்பிச் செல்லுங்கள் – ஜமால்

டாக்டர் கீர் தோயோ சிலாங்கூரில் உள்ள சுங்கை பெசார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகக் கூறிய பிறகு, அரசியலில்  “மீண்டும்” பற்றி யோசிப்பதற்குப் பதிலாக “திரும்பிச் செல்லுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டார்.

அம்னோவின் சுங்கை பெசார் பிரிவின் தலைவரான ஜமால் யூனோஸ், அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ மற்றும் பாரிசான் நேசனலை பிரதிநிதித்துவப்படுத்துவதை கிர் மறந்துவிட வேண்டும் என்றார் அவர்.

முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் கீர் தோயோ, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஷா ஆலமில் உள்ள ரிம20 மில்லியன் பங்களா தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாகி சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

கீரின் ஆதரவாளர்கள் அம்னோவின் தேர்தல் பணி குழுவினரை   இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜமால் கூறினார்.

“அம்னோ பிரிவுத் தலைமை இப்போது வேட்பாளர்களைப் பற்றி சிந்திக்கவில்லை. கட்சியின் குழுவினர்கள் சீராக இயங்குவதையும், தேர்தலை எதிர்கொள்ளவும், வெற்றி பெறவும் தயாராக இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்று ஜமால் கூறியதாக பத்திரிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

“அவர் திரும்பி வர வேண்டிய அவசியமில்லை, திரும்பிச் செல்லலாம் ” என்று ஜமால் கூறினார்.

கீர் தோயோ, 1999 முதல் 2013 வரை மூன்று முறை சுங்கை பஞ்சாங்கின் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கடந்த வாரம் அவர் சுங்கை பெசாரில் போட்டியிட விரும்புவதாகக் கூறினார், இப்போது பெர்சதுவின் முஸ்லிமின் யஹாயாவின் இடத்தை அம்னோ மீட்டெடுக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

ஷா ஆலமில் உள்ள அவரது பங்களாவுக்காக 20 மில்லியன் ரிங்கிட் செலவில் நிலம் வாங்கியதில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக 2011 ஆம் ஆண்டு அவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நிபந்தனை அணையில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

FMT