வர்த்தக அல்லது அரசு நிறுவனங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவு கசிந்ததாக மீண்டும் மீண்டும் வந்த தகவலைத் தொடர்ந்து தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010 ஐ( Personal Data Protection Act) திருத்துமாறு புத்ராஜெயா வலியுறுத்தப்பட்டுள்ளது
நேற்று(6/6), ஒரு அறிக்கையில், PKR தகவல்தொடர்பு இயக்குனரும் Lembah Pantai நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாஹ்மி ஃபாட்சில்(Fahmi Fadzil), கடந்த ஐந்து ஆண்டுகளில் 100 மில்லியன் தனிப்பட்ட பதிவுகள் அறியப்பட்ட கசிவானது என்று மதிப்பிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் பிரபலமான “டெல்கோ கசிவு”(telco leak) மற்றும் சமீபத்திய “பிகாஸ் கசிவு” (Pikas leak) உள்ளிட்ட எட்டு சம்பவங்களை மேற்கோள் காட்டிய ஃபஹ்மி(Fahmi), இதுவரை ஒரே ஒரு தரவு திருட்டு வழக்கு மட்டுமே நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
PDPA வை மீறியதாக 2020 ஆம் ஆண்டில் மலிண்டோ ஏர் மீது குற்றம் சாட்டப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று ஃபஹ்மி ( மேலே ) கூறினார்.
“இந்த நிலைமை பொது மக்களுக்கு அல்லது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. திருடப்பட்ட அனைத்து தரவுகளுக்கும் என்ன நடந்தது? அது ஏன் இவ்வளவு பரவலாக இருக்கிறது?” என்று அவர் கேட்டார்.
முந்தைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டாட்சி நிர்வாகம் PDPAவில் திருத்தங்களை மேற்கொள்வதில் பணியாற்றி வந்ததாகவும், ஆனால் பிப்ரவரி 2020 இல் அரசாங்க மாற்றம் காரணமாக அதன் பணிகளை முடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இதைக் கருத்தில் கொண்டு, தற்போதைய அரசாங்கம் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்டத்தை மறுஆய்வு செய்வதை வெளிப்படுத்துமாறு புத்ராஜெயாவை ஃபஹ்மி வலியுறுத்தினார்.
“தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகம் ஜூலை 18 ஆம் தேதி அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தை பயன்படுத்தி திருத்தங்களை தாக்கல் செய்ய வேண்டும்”.
“கடவுள் சித்தமானால், இதேபோன்ற ஒரு தனி நபர் மசோதாவை தாக்கல் செய்வேன்,” என்றும் அவர் கூறினார்.