மியான்மரில் இன்னும் ‘நூற்றுக்கணக்கானோர்’ சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் ,என்கிறார் கடத்தப்பட்ட இளைஞர்

மியான்மருக்கு கடத்தப்பட்டு, மோசடி செய்பவராக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட ஒருவர், மியாவாடியில் உள்ள “சிறிய கிராமத்தில்” நூற்றுக்கணக்கான மலேசியர்கள் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

தன்னை சியா என்று மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்ட அந்த 19 வயது இளைஞர், தென்கிழக்கு மியான்மரில் உள்ள மியாவாடிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு தாய்லாந்தில் உள்ள ஒரு கரோக்கி மையத்தில் பணியாளராகப் பணிபுரிவதற்காக தான் ஏமாற்ற்றப்பட்டேன் என்று கூறினார்.

மார்ச் மாதம் முகநூலில் ஒரு இலாபகரமான வேலை விளம்பரத்திற்கு அவர் பதிலளித்த பிறகு, நிறுவன உறுப்பினர்கள் அவரை மலாக்காவில்   உள்ள அவரது சொந்த ஊரிலிருந்து கிளந்தனுக்கு அழைத்து வந்தனர், அங்கு அவர் சட்டவிரோதமாக தாய்லாந்திற்குள் நுழைந்தார். பின்னர் அவர் தாய்லாந்து-மியான்மர் எல்லை நகரமான மே சோட்டுக்கு சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்தி கொண்டு வரப்பட்டார், அங்கிருந்து இவரின் பயணம் மியாவாடி வரை நீட்டிக்கப்பட்டது.

மியாவாடியில் நான்கு மாடிக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த “நூற்றுக்கணக்கான” மலேசியப் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோது ஆச்சரியமடைந்ததாகக் கூறிய அவர், ஒரு மாடிக்கு “சுமார் 300” மலேசியர்கள் இருப்பதாகக் கூறினார்.

“அவர்கள் மலேசிய நிறுவன உறுப்பினர்களால் கண்காணிக்கப்பட்டனர். இந்த உறுப்பினர்கள் lஉலகெங்கிலும் உள்ள மக்களை ஏமாற்றுவதற்கு நம்மை மூளைச்சலவை செய்யும் மேற்பார்வையாளர்கள், இவர்களை ‘ஊக்குவிப்பாளர்கள்’  என்று அழைக்கப்படுகிறார்கள், ”என்று அவர் விஸ்மா எம்சிஎ -இல் செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் தைவானில் வசிக்கும் சீனர்களை காதல் மோசடி நடவடிக்கையில் ஈடுபட வைக்க வேண்டிய தான் என்னுடைய வேலை என்று சியா கூறினார்.

“நான் மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்தேன். அதன்பிறகு, நான் வேலை செய்ய மறுத்ததால், தினமும் என்னை பேஸ்பால் மட்டையால் அடித்தனர்,”.

மூன்றாவது மாடியில் இருந்து தன்னை கீழே தள்ளிய நிறுவன உறுப்பினர்களுடன் ஏப்ரல் மாதம் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், இதனால் தனது கால் மற்றும் விலா எலும்பு முறிந்ததாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், அவர் மீது இரக்கம் கொண்ட உறுப்பினர்கள், இரண்டு வாரங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்பினர்.

“நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, அவர்கள் என்னை விடுவிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார், ஆனால் மீட்கும் தொகையாக 120,000 ரிங்கிட் கேட்டார்கள். எனது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவர்கள் 70,000  ரிங்கிட்க்கு ஒப்புக்கொண்டனர்.

“என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல எனது குடும்பத்தினர் நிதி திரட்டினர்,” என்று கடந்த மாதம் வீடு திரும்பிய சியா கூறினார்.

எம்சிஎ பொதுச் சேவைகள் மற்றும் புகார்கள் துறைத் தலைவர் மைக்கேல் சோங், நேற்று காலை கம்போடியாவில் உள்ள மலேசியத் தூதரகத்தால் மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட எட்டு பேர் மீட்கப்பட்டதாகத் தமக்குத் தெரிவிக்கப்பட்டது என்றார்.

“எங்கள் தூதரக அதிகாரிகள் இன்று காலை அவர்களைச் சந்திக்க தடுப்பு மையத்திற்குச் சென்றனர். விரைவில் வீடு திரும்புவார்கள் என நம்புகிறோம்.”

“பாதிக்கப்பட்டவர்களில் ஏழு பேரும் அடைத்துவைத்திருந்த போது தாக்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

 

FMT