பார்ட்டி பங்சா மலேசியாவின் அடுத்த தலைவராக ஜூரைடா கமாருடின்

அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூரைடா காமருடின் புதிதாக உருவாக்கப்பட்ட பார்ட்டி பங்சா மலேசியா பிபிஎம் இன் “அடுத்த தலைவராக   நியமனம்” செய்யப்பட்ட்டார்.

பிபிஎம் இன் அரசியல் பணியகம் மற்றும் உச்ச கவுன்சில் மே 26 அன்று கட்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஜுரைடா அனுப்பிய பின்னர், அவர் உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்  என்று பிபிஎம் தலைவர் லார்ரி சங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

“பிபிஎம் இன் அடிமட்ட மக்களின் வேண்டுகோளின் பேரில், பிபிஎம் இன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உந்துதலாக ஜூரைடாவை ‘தலைவராக  நியமனம்’ செய்ய அரசியல் பணியகம் மற்றும் உச்ச கவுன்சில் ஏகமனதாக ஒப்புக்கொண்டன,” என்றார் அவர்.

பெருந்தோட்டக் கைத்தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சர் மே 26 அன்று பெர்சத்துவில் இருந்து விலகினார், மேலும் அவரது அமைச்சரவையில் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.

தனது அமைச்சரவைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதாகக் கூறிய ஜுரைடா, அமைச்சராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அமைச்சரவையில் தனது எதிர்காலம் குறித்து விவாதிக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபை இதுவரை அவர் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

பாரிசான் நேசனலில் இணைவதற்கான பிபிஎம் இன் விண்ணப்பம் குறித்து கருத்து கேட்கப்பட்டபோது, ​​இரு கட்சிகளும் இன்னும் வாய்மொழி விவாதங்களை நடத்தி வருவதாக லார்ரி சங் கூறினார்.

“எங்களால் இது ஏற்கனவே தொடங்கப்பட்ட ஒரு செயல்முறையாகும், அவர்கள் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

 

FMT