காற்றின் தூய்மை 22,000 உயிர்களை காப்பாற்றும், ரிம 2,120 கோடி சேமிக்க முடியும்

காற்று மாசுபாட்டின் சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்த ஒரு ஆய்வின்படி, காற்றின் தர அளவுகள் மேம்பட்டால் மலேசியா ஆண்டுக்கு 22,000 உயிர்களையும் ரிம212 பில்லியன் சேமிக்க முடியும்.

பின்லாந்தை தளமாகக் கொண்ட எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) மற்றும் Greenpeace Malaysia ஆகியவற்றின் ஆய்வில், காற்று மாசுபாடு தொடர்பான நோய்களைக் குறைப்பதன் மூலமும், பொது நிதியில் சேமிப்பதன் மூலமும் இதனை அடையளாம் என்று தெரிவித்துள்ளது.

ஆய்வின்படி, தற்போது மலேசியாவின் சுற்றுப்புற காற்றின் தரத் தரநிலைகள், 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு (WHO) 2021 இல் வழங்கிய வழிகாட்டுதல்கள், 2005 இல் வழங்கப்பட்ட முந்தைய வழிகாட்டுதல்களைக் கூட பூர்த்தி செய்யவில்லை.

இதன் விளைவாக, காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 32,000 தவிர்க்கக்கூடிய இறப்புகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் சுற்றுப்புற காற்று மாசுபாட்டின் பொருளாதார செலவு ரிம303 பில்லியன் அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20% என்று ஆய்வு மேலும் மதிப்பிட்டுள்ளது.

“நுண்ணிய துகள்கள் (PM2.5) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) ஆகியவற்றிற்கான புதிய மற்றும் மிகவும் பாதுகாப்பான 2021 உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை சந்திப்பது ஆண்டுக்கு 22,000 உயிர்களைக் காப்பாற்றும்,” என்று கிரெயா தென்கிழக்கு ஆசிய ஆய்வாளர் இசபெல்லா சுவாரஸ்(Isabella Suarez ) நேற்று முன் தினம் (8/6), ஒரு அறிக்கையில் கூறினார்.

“காற்று மாசுபாடு தொடர்பான நோய்கள்,  எடை குறைவாக பிறந்த குழந்தை  மற்றும் குறைபிரசவம் மற்றும் ஊனமுற்ற ஆயுட்காலம் போன்ற பிற பாதிப்புகள் 75% அதிகமாக குறைக்கப்படும்”.

“2021 உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுடன், மலேசியர்களுக்கான பொருளாதார செலவு ஆண்டுதோறும் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும், இது காற்று மாசுபாடு தொடர்பான செலவுகளில் ஆண்டுக்கு ரிம 212 பில்லியன் சேமிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்”.

WHO இன் 2005 ஆம் ஆண்டின் வழிகாட்டுதல்களுடன்  தரநிலைகளை மேம்படுத்துவது கூட ஆண்டுக்கு 12,200 உயிர்களைக் காப்பாற்றும் மற்றும் நாட்டிற்கு RM124 பில்லியனை சேமிக்கும் என்று சுரேஸ் மதிப்பிட்டுள்ளார்

பொது சுகாதார நிபுணர் டாக்டர் கோர் ஸ்வீ ஹெங்( Dr Khor Swee Heng) கூறுகையில், காற்று மாசுபாடு பொதுமக்களுக்கு பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நுரையீரல், டெஸ்டிகுலர் புற்றுநோய் அகிய ஆபத்துகள் அடங்கும்.

இது தடிப்புத் தோல் அழற்சி போன்ற மோசமான தோல் நிலைமைகளுக்கும் வழிவகுக்கும், மேலும் மனநலத்தையும் பாதிக்கலாம் என்று அவர் கூறினார்.

சிறந்த காற்றின் தரத்தை அடைய, கிரீன்பீஸ் மலேசியாவின் (Greenpeace Malaysia) பிரச்சாரர் ஹெங் கியா சுன் (Heng Kiah Chun), காற்றின் தரநிலைகளை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும், காலக்கெடு மற்றும் அமலாக்கக்கூடியதாக மாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் பொது மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதை அதன் காற்றின் தர நிர்வாக கட்டமைப்பின் முக்கிய நோக்கமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.