சபா செம்பனை தொழில் மீது சீனா ஆர்வம், எதிர்கொள்வதில் கவனம் தேவை என்கிறார் சலாவுடின்

சபாவின் செம்பனை (பாமாயில்) தொழிலில் மீது சீனா ஆர்வம்காட்டுவதை அணுகுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று, அமானாவின் துணைத் தலைவர் சலாவுடின் அயூப் அரசாங்கத்திற்க்கு  அழைப்பு விடுத்துள்ளார்.

சீன வெளியுறவு மந்திரி வாங் யி, ஜூன் 4 அன்று சபாவிற்கு வந்தார், மாநிலத்தின் பாமாயில் தொழிலை ஆராய்வதில் தனது நாட்டின் ஆர்வத்தை துணை முதல்வர் ஜெஃப்ரி கிடிங்கனிடம் தெரிவித்ததாக , ஒரு அறிக்கையில் சலாவுடின் கூறியுள்ளார்.

“பொதுவாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை ஊக்குவிக்க வேண்டும் என்றாலும், பாமாயில் துறையில் முதலீடு செய்யும் சீனாவின் நோக்கத்தை பல கோணங்களில் உற்றுநோக்க  வேண்டும்.”

2011 முதல் 2020 வரை, சீன நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் ஹெக்டேர் விவசாய மற்றும் சுரங்க நிலங்களை வெளிநாடுகளில் வாங்கி குத்தகைக்கு எடுத்ததாக சலாவுடின் விளக்கினார்.

இலங்கை, தான்சானியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகளின் அனுபவங்கள், சீனாவின் முதலீடுகள் சொத்துக்கள், மற்றும் தேசிய இறையாண்மையை கூட இழக்க நேரிடும் என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நிலத்தை அந்நிய நாடுகளுக்கு மாற்றுவது ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் கூறினார்.

“தென் சீனக் கடல் சீனா மற்றும் மேற்கத்திய சக்திகளுக்கு இடையே செல்வாக்கு மற்றும் அதிகாரத்திற்கான போராட்டத்தில் சபாவின் செயலசார்ந்த நிலைப்பாடு, நாட்டிலிருந்து முதலீட்டு சலுகைகளை மதிப்பீடு செய்வதிலும் அதை ஏற்றுக்கொள்வதிலும் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்” என்று சலாவுடின் கூறினார்.

தங்கள் நாட்டில் விவசாய மற்றும் தோட்ட நிலங்களை சொந்தமாக வைத்திருக்கும் சீனாவின் கோரிக்கையை இந்தோனேசியா நிராகரித்ததில் இத்தகைய எச்சரிக்கையான அணுகுமுறை தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

“எனவே, அதே அணுகுமுறையை எடுப்பதில் அரசாங்கம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் , அதேநேரத்தில் ஒரு சேவை வழங்குநர் மற்றும் நுகர்வோர் என்ற முறையில் மட்டுமே சீனாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளைத் தொடர வேண்டும்.

“தேசிய இறையாண்மையானது வெளிநாட்டு முதலீடு, பொருளாதார உறவுகள் மற்றும் இருதரப்பு வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தாலும் கூட எந்த அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FMT