பல நதிக்கரைகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது

நதிக்கரைகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமான கட்டமைப்புகளால்,  நாடு முழுவதும் உள்ள பல ஆபத்தான மற்றும் முக்கியமான பகுதிகளில் உள்ள நதிக்கரைகளுடன் ஒட்டிய நிலபகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவை என்று கண்டறியப்பட்டுளனன.

சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிர்வாக அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் (Tuan Ibrahim Tuan Man) இந்த பகுதிகளில், கிள்ளான் பள்ளத்தாக்கும் அடங்கும் என்று கூறினார்,  இதனால் ஆற்றைப் பாதுகாப்பதும் கடினமாக வருகிறது என்றார்.

“திடீர் வெள்ளம் வரும் போது, முறையான நதிக்கரைகள் இருந்தால் அதன் பாதிப்பை பெருமளவு தவிர்க்க இயலும். அதுதான்  நதி இருப்புக்களின் செயல்பாடு.  ஆனால், ஒரு நதிக் காப்பகத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்படும்போது, அதைக் கட்டுப்படுத்துவது அல்லது நடவடிக்கை எடுப்பது நமக்குக் கடினமாக இருக்கிறது”.

“உதாரணமாக, தாமான் மெலவதியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், ஆற்றங்கரைகள் வரை உள்ள நதி ஒதுக்குப் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவர்களை  இடமாற்றம் செய்ய  (குடியிருப்பாளர்கள்) அதிக செலவாகும்.” என்றார்.

“உண்மையில், குடியிருப்பாளர்கள் ஏற்கனவே (வீடுகளை வாங்க) செலவுகளைச் செய்துள்ளனர். இதன் காரணமாக, அவர்களின் சோகத்தைத் தவிர்ப்பதற்காக நதிகள் பாதுகாக்கப்படுவதை  உறுதிப்படுத்துவது அமைச்சகத்திற்கு ஒரு சவாலாக உள்ளது, “என்று நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்புத் துறையின் மூத்த மேலாளர்கள் மற்றும் மாவட்ட பொறியாளர்கள் மாநாட்டில் நேற்று முன் தினம்(13/6) உரையாற்றிய பின்னர் அவர் கூறினார்.

துவான் இப்ராஹிம் கூறுகையில், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் நதிகளின்  ஒதுக்குப்புறத்தில் அனுமதிக்கப்பட்டது, இதனால் சுற்றியுள்ள பகுதிகள்  பாதுகாக்கப்படும்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள முக்கியமான அல்லது ஆபத்தான பகுதிகளுக்கு, திடீர் வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்படும் போது, ​​தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாமல் அல்லது அரிப்பு ஏற்படாமல் இருக்க, கரைகளை கட்டுவது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைக்காக, மத்திய அரசுடன்  தொடர்ந்து விவாதித்து வருவதாக  அவர் கூறினார்.