ஹரிமாவ் மலாயா ஆசிய கோப்பைக்கு தகுதி பெற 40 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது

நேற்றிரவு புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக உணர்ச்சிகரமான வெற்றியைப் பெற்றதன் மூலம் 2023 ஆசியக் கோப்பைக்கான  தகுதி பெறுவதற்கான 40 ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பு முடிவு கட்டியது.

கிம் பான் கோன்(Kim Pan Gon) பயிற்சியளித்த ஹரிமாவு மலாயா அணி, ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகளின் கடைசி Group E போட்டியில் வங்கதேசத்தை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

52,964 பார்வையாளர்களுக்கு முன்னால் விளையாடிய தேசிய அணி, ஒரு உறுதியான வெற்றியைப் பெற்று, ஆறு புள்ளிகளுடன் குழு சாம்பியன் பஹ்ரைனை பின்னுக்குத் தள்ளி, 2023 ஆசியக் கோப்பைக்கான டிக்கெட்டை முதல் ஐந்து ரன்னர்-அப்களில் ஒன்றாக பதிவு செய்தது.

Muhammad Safawi Rasid, Dion Cools, Muhammad Syafiq Ahmad மற்றும்  substitute Darren Lokஆகியோர் கோல்களை அடித்தனர்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், 2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஹரிமாவ் மலாயா அணியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.