RON97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு 11 சென்கள் அதிகரித்து RM4.83 ஆக இருக்கும், அதே நேரத்தில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஜூன் 16 முதல் ஜூன் 22 வரையிலான வாரத்தில் மாற்றம் இருக்காது.
இந்த இரண்டு பொருட்களின் சந்தை விலையும் தற்போதைய உச்சவரம்பு விலையை விட உயர்ந்துள்ள போதிலும், RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே லிட்டருக்கு RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும் என்று நிதி அமைச்சகம் நேற்று(15/6) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தானியங்கி விலை நிர்ணய பொறிமுறை (APM) சூத்திரத்தின்படி பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியுள்ளது.
“உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, தொடர்ந்து மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும்,” என்று அது கூறியது.