அடையாளம் தெரியாத நபரால் ஜக்டிப் சிங் தாக்கப்படார்

பினாங்கு மாநில செயலவை உறுப்பினர் ஜக்டிப் சிங் தியோ(Jagdeep Singh Deo) வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

பினாங்கின் தஞ்சோங் பூங்கா உள்ள ஒரு கடையில் இரவு 8.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த சட்டமன்ற உறுப்பினரை அணுகி அவரையும் பின்னர் அவரது மகனையும் தள்ளிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக மலாய் மெயில் செய்தி வெளியிட்டது.

51 வயதான அந்த டத்தோ கெராமட் சட்டமன்ற உறுப்பினர், சம்பவத்தில் காயம் அடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜக்டிப்புக்கு  கணுக்காலில் காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர் இப்போது நிலையான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பினாங்கு காவல்துறைத் தலைவர் முகமட் ஷுஹைலி முகமட் ஜைன்(Mohd Shuhaily Mohd Zain) அவர்கள் இந்த வழக்கு தொடர்பாக சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேகநபர் இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 325 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.