ஜுரைடா கமருடினின் அமைச்சரவைப் பதவி குறித்து முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பலவீனமான நிலையைக் காட்டுகிறது, என்று ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமது தெரிவித்துள்ளார்.
இது அவரின் “குழப்பம் மற்றும் பலவீனமான நிலையை பிரதிபலிக்கிறது”, “அவரால் முடிவுகளை எடுக்கவோ அல்லது தனது அதிகாரத்தை நிலைநிறுத்தவோ முடியவில்லை, ஏனெனில் அவர் சில தரப்பினரால் இயக்கப்படுகிறாரா என்று கூறியுள்ளார் நூர் ஜஸ்லான்.
“இப்படி நேரத்தை தாழ்த்துவது அவர் கால்களை அவரே இழுப்பதற்கு சமம் என்பதைக் காட்டுகிறது. ஜுரைடா பெர்சத்துவிலிருந்து பார்ட்டி பங்சா மலேசியாவிற்கு (பிபிஎம்) சென்று இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது, இன்னும் அவர் அமைச்சரவையில் உள்ளார். நாட்டின் வரலாற்றில் எந்த அம்னோ பிரதமரும் இவ்வளவு பலவீனமாக இருந்ததில்லை.
தோட்டத்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா அல்லது வேறொரு பெர்சத்து பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்படுவாரா அல்லது அடுத்த பொதுத் தேர்தல் GE15 வரை அவர் அந்தப் பதவியில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படுவாரா என்று பிரதமர் இஸ்மாயில் இன்னும் அறிவிக்கவில்லை.
அமைச்சர் பதவியை வகிக்கக்கூடிய பல நாடளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்,
மூன்று பிபிஎம் எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறலாம் அதனால் இது அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பை பாதிக்கும் என்று இஸ்மாயில் கவலைப்படுகிறார் என்று நினைக்கிறார்களா என்று கேட்டதற்கு, பிரதமர் பலவீனமான நிலையில் இருக்கும்போது எதுவும் சாத்தியம் என்று நூர் ஜஸ்லான் கூறினார்.
பெர்சத்து தலைவர் முகைடின் யாசின் இஸ்மாயிலிடம் ஜுரைடாவின் மந்திரி பதவியை விரைவில் முடிவெடுக்கும்படி வற்புறுத்தினார், ஏனெனில் அவருக்குப் பதிலாக ஏற்கனவே ஒரு வேட்பாளர் இருப்பதாகவும் ,இஸ்மாயிலைச் சந்திக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
தொடங்கப்பட்ட பல திட்டங்களை முடிக்க வேண்டியிருப்பதால், இஸ்மாயில் தன்னைத் தொடர அனுமதிப்பார் என்று நம்புவதாகக் ஜூரைடா கூறினார்.
“GE15 நெருங்கி வருவதால், இந்த நேரத்தில் ஜுரைடாவை மாற்றுவதற்கு இஸ்மாயிலுக்கு எந்தக் கட்சியும் அழுத்தம் கொடுக்கக் கூடாது. பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெர்சத்து ஒதுக்கீடு என்று கூறி, அமைச்சரை மாற்றுவதில் அர்த்தமில்லை. தற்போதைய நிலையே நீடிக்க வைப்பது பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லது.”
“பிரதமர் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியக்கூடாது, ஏனென்றால் ஜூரைடாவை மாற்றுவது அல்லது தக்கவைப்பது அவரது தனிச்சிறப்பு” என்று அகாடமி நுசாந்தராவின் அஸ்மி ஹாசன் கூறினார்.
FMT