பழமை நினைவுகளுடன் மலேசியா வரும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்

ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் வரும் செவ்வாய்கிழமை மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொள்ளவுள்ளார்.

மலேசியாவில் பிறந்த அவர், தனது பயணத்தின் போது, ​​தனது இணை அமைச்சர் சைபுதீன் அப்துல்லா, பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் .

“விரிவான மூலோபாய பங்குதாரர்கள் என்ற வகையில் எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, பொருளாதார மீட்பு, காலநிலை நடவடிக்கை, கல்வி உறவுகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து விவாதிப்பேன்” என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

54 வயதான வோங் , தான் பூர்வீகமாகக் கொண்ட சபாவிற்கும் செல்வதாகவும் இது ஆஸ்திரேலியாவுடன் நீண்டகால உறவுகளைக் கொண்ட ஒரு பகுதி என்றும் கூறினார்.

“இது நான் வாழ்ந்த பகுதி. எனது ஆரம்ப ஆண்டுகளை கோட்டா கினாபாலுவில் கழித்துள்ளேன், ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சராக இந்த நகரத்திற்குத் திரும்புவதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன், ”என்று  கூறினார்.

மலேசியாவுக்குச் செல்வதற்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை வியட்நாமுக்குப் புறப்படும் வோங், அங்கு அதிபர் நுயென் சுவான் ஃபூக், பிரதமர் ஃபாம் மின் சின் மற்றும் வெளியுறவு மந்திரி பெய் தான் சோன் ஆகியோரை சந்திப்பார்.

ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பிறகு, தென்கிழக்கு ஆசியாவிற்கான தனது இரண்டாவது பயணமாகும் என்றும், ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் தென்கிழக்கு ஆசியாவின் எதிர்காலத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதையம் அவர்  வலியுறுத்தினார்.

“குடும்பம், வணிகம், கல்வி மற்றும் சுற்றுலாபோன்ற உண்மையான இணைப்புகள் வியட்நாம் மற்றும் மலேசியாவில் எங்களுக்கு உள்ளது,இது நம்மை பிணைக்கும் புவியியலை விட அதிகம்.

“நமது நாடுகள் மற்றும் அதன் பகுதியின் நலனுக்காக தற்போதுள்ள கூட்டாண்மைகளை மற்றும் அந்த உறவுகளை எனது வருகை ஆழப்படுத்த முயல்கிறது.”

வோங்  2001 இல் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கான செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 2007, 2013 மற்றும் 2016 இல் தனது பதவியில் நிலைத்தததுடன், ஆஸ்திரேலியாவில் நான்காவது நீண்ட செனட்டராக பணியாற்றிய புகழை பெற்றுள்ளார்.

2013 இல் செனட்டில் அரசாங்கத்தின் தலைவராக ஆன முதல் பெண்மணி என்ற வரலாற்றையும் அவர் படைத்தார், பின்னர் 2013 தேர்தலில் தனது கட்சியின் தோல்விக்குப் பிறகு செனட்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

FMT