ஒரு மாணவனை கொடுமைப்படுத்தியதற்காக, 10 சக மாணவர்கள் கைது

பேராக்கின் தெலுக் இந்தானில் உள்ள உறைவிடப் பள்ளியில் (போர்டிங் பள்ளி) நடந்ததாகக் கூறப்படும் கொடுமைப்படுத்துதல் வழக்கின் விசாரணைக்கு உதவ 10 மாணவர்களை  அதிகாரிகள் காவலில் வைத்துள்ளனர்.

6 முதல் 17 வயதுடைய மாணவர்கள் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பேராக் காவல்துறைத் தலைவர் மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹித்.

பயங்கர ஆயுதம் ஏந்தி கலவரத்தில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டத்தின் 148வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜூன் 23 அன்று 14 வயது மாணவரிடமிருந்து ஒரு புகாரைப் பெற்ற காவல்துறை, படிவம் 4 மற்றும் படிவம் 5 மாணவர்கள் கைது செய்தது.

ஜூன் 23 அன்று நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பாதிக்கப்பட்ட நபர்,  பள்ளியில் 10 மாணவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாக ஆரம்ப கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.  சூடான இரும்பினால் அவரது உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

பாதிக்கப்பட்டவர், சந்தேக நபர்களில் ஒருவரின் காதலியுடன் பேசுயதாகவும், அதன்  பின்னணியில் பொறாமை தான் காரணம் என்று காவல் அதிகாரிகள் நம்புகின்றனர்.

பாதிக்கப்பட்டவர் தனது தாயை அழைத்துள்ளார், பின்னர் சிகிச்சை பெற அவரை தெலுக் இன்டான் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் என்று மியோர் ஃபரிடலாத்ராஷ் கூறினார். “தற்போது, ​​உடல்நிலை சீராக உள்ளது”.

கடந்த காலங்களில் கூட வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த மாதம், நெகிரி செம்பிலானின் லாபுவில் உள்ள ஒரு மத உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்களின் வாக்குமூலங்களை காவல் அதிகாரிகள் பதிவு செய்தனர், இது ஒரு கொடுமைப்படுத்துதல் வழக்கு , உடலின் பல பகுதிகளில் காயங்களுடன் 2 மாணவர்கள்   மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் நிலைமை ஏற்ப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில், பேராக் மாநிலத்தில் உள்ள குவாலா கங்சார் நகரில் உள்ள உறைவிடப் பள்ளி, கொடுமைப்படுத்துதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி 10 மாணவர்களை வெளியேற்றியது. 13 வயதுடைய ஒன்பது மற்றும் 15 வயதுடைய மாணவர்களை கைது செய்த காவலர்கள், விசாரணைக்குப் பின்னர் அவர்களை பிணையில் விடுவித்தனர்.

FMT