‘கோழை’ ஜாஹிட், அரசியலை விட்டு வெளியேறு – வான் சைபுல்

நாட்டின் அரசியல் நிலையற்ற தன்மைக்கு  பின்னால் உள்ள “சூழ்ச்சிக்கு” பகான் டத்தோ எம்பிதான் காரணம், அதனால் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி “ஓய்வு பெற வேண்டும்”, என்று வலியுறுத்தியுள்ளார் பெர்சத்து தகவல் தலைவர் வான் சைபுல் வான் ஜான்.

பாரிசான் நேஷனல் தலைவரின் ஓய்வு நாட்டிற்கு உறுதிநிலையை திரும்ப பெற்றுத்தரும் என்றும், ஜாஹிட் பிரதமராக ஆவதற்கு “தீவிரமாக” இருப்பதாக, வான் சைபுல் முகநூல் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.

“உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நீங்கள் தான் பொறுப்பு, ஏனெனில் உங்கள் கவனம் உறுதியற்ற தன்மையை உருவாக்குவதில் உள்ளது. உறுதியான அரசியல் நாட்டிற்கு திரும்புவதற்கு நீங்கள் ஓய்வு பெறுவது நல்லது,” என்று அவர் கூறினார்.

15 அம்னோ எம்பிக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் அன்வார் இப்ராஹிமை பிரதமராக ஆதரித்து சட்டப்பூர்வ பிரகடனங்களில் கையெழுத்திட்டபோது,அவ்ர்கள் எடுத்த நடவடிக்கையின் பின்னணியில் ஜாஹிட் முக்கிய பங்கு வகித்தார் என்று வான் சைபுல் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை அம்னோவின் தேர்தல்களை நடத்த விரும்பவில்லை என்பதற்காக அவர் ஜாஹிட்டை “கோழை” என்று அழைத்தார்.

இஸ்மாயிலிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பும் ஜாஹிட், உண்மையில் இஸ்மாயிலைப் பாதுகாப்பார் என்று நம்புவது “முட்டாள்தனமானது” என்று அவர் கூறினார்.

ஜாஹிட் மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றே நாட்டில் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

FMT