கடந்த 11 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் மஇகா துணைத்தலைவர் சுப்ரமணியம் சின்னையா நேற்று காலமானார்.
சுப்ரமணியம், அக்டோபர் 1979 முதல் ஜூன் 2006 வரை மஇகா துணைத் தலைவராக பணியாற்றினார். 27 ஆண்டுகள் பணியாற்றியதன் மூலம் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற புகழுக்கு உரியவர்.
1982 முதல் 2004 வரை செகாமட் மற்றும் 1974 முதல் 1982 வரை டமான்சர நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அக்கால கட்டத்தில் பிரதமர்கள் ஹுசைன் ஓன், மகாதீர் அப்துல்லா அமாட் படாவி ஆகியோரின் அமைச்சரவையில் துணை அமைச்சராகவும் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றியவர்.
அன்னார் நேற்று, இரவு 8 மணியளவில் தனது 77 வயதில் இறந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 11 ஆண்டுகளாக உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்த சுப்ரமணியம் தூக்கத்தில் நிம்மதியாக இறந்ததாக அவரின் மகன் சுந்தர் கூறியுள்ளார். அவருக்கு மனைவி தீனா சுப்பிரமணியம், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அன்னாரது இறுதிச் சடங்கு நாளை 7 ஜூலை 2022 அன்று சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரது குடும்ப இல்லத்தில் நடைபெறும் என்று அறியப்படுகிறது.
அன்னாரது மறைவால் துக்கத்தில் துயரும் குடும்பத்தினர்களுக்கு மலேசியாஇன்று நிருவாகத்தின் ஆழ்ந்த இரங்கள்.