பாலிங்கைத் தாக்கிய வெள்ளத்தைத் தொடர்ந்து கெடாவில் உள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்றிரவு செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் 200,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
கூலிம் ஹைடெக் மற்றும் பினாங் துங்கால்/சுங்கை பட்டானி ஆலைகள், நீர் அதிக தூய்மையற்ற வகையில் இருந்ததால் முறையே இரவு 10.50 மணிக்கும், 11.10 மணிக்கும் முழு அடைப்புக்கு உள்ளாக வேண்டியிருந்தது, என்று கெடா மந்திரி பசார் சனுசி முகமட் நூர் கூறியுள்ளார்.
இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
“இந்த தற்காலிக மூடல் கூலிம் ஹைடெக் பகுதியில் சுமார் 80,000 பயனீட்டாளர்களும் , பினாங் துங்கல் / சுங்கை பட்டானி பகுதியில் உள்ள 121,000 பயனீட்டாளர்களும் பாதிப்ப்டைவர்” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் சலுகை வழங்கும் நிறுவனமான ஆயர்டாருல் அமான், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்களை வழங்குவார்கள்.
நேற்றிரவு நிலவரப்படி, 1,400 க்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குபாங், பாலிங்கில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர்.
FMT