இழப்புகள்,வெளியேறுதல்கள் இருந்தபோதிலும்,பெர்சத்துவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது – வான் சைபுல்

மே மாதத்திலிருந்து பல பெரிய நபர்கள்  வெளியேறினாலும், சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் தோல்வியடைந்தாலும், தனது கட்சியின் எதிர்காலம் குறித்து கவலையில்லாமல்,மேலும் நம்பிக்கையுடன் இருப்பதாக பெர்சத்து தகவல் பிரிவு  தலைவர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்துள்ளார்.

அம்பாங் எம்பி ஜுரைடா கமாருடின் மற்றும் லஹாத் டத்து எம்பி முகமதின் கெட்டாபி ஆகியோர் வெளியேறியது பெர்சாத்துவுக்கு இழப்பு, என்று செய்தியாளர்களின் சந்திப்பில் வான் சைபுல் ஒப்புக்கொண்டார்.

எவ்வாறாயினும், பெர்சத்துவில் சேருவதற்கு அதிகமானோர் கையெழுத்திட்டு வருவதாகக் கூறிய அவர், தற்போது முகைடின் யாசின் தலைமையிலான கட்சி 800,000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

“இது பெர்சாதுவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதைக் காட்டுகிறது. இது ஒரு சாதகமான வளர்ச்சியாகும்.

“ஆமாம், சில பிரமுகர்கள் கட்சியை விட்டு விலகிவிட்டனர் ஆனால், என்னைப் பொறுத்தவரை இது ஜனநாயகத்தில் ஒரு சாதாரண செயல்முறை. எந்தக் கட்சியை விட்டு வெளியேறினாலும் சரி, எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது,”.

இன்னும் தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சராக இருக்கும் ஜுரைடா, புதிதாக உருவாக்கப்பட்ட பார்ட்டி பங்சா மலேசியா பிபிஎம் க்கு தலைமை தாங்க மே 26 அன்று பெர்சாத்துவிலிருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து செகாமா சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் முகமடின், ஜூன் 28 அன்று கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக ஆனார். முன்னாள் வாரிசான் நபர் கடந்த அக்டோபரில் ஷாஃபி அப்டலின் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து ஒரு மாதம் கழித்து பெர்சசத்துவில் சேர்ந்தார்.

ஜுரைடாவின் வெளியேற்றம் பெர்சத்து உச்ச கவுன்சில் உறுப்பினர் அஸ்மின் அலி மற்றும் பத்து பஹாட் எம்பி ரஷித் ஹஸ்னோன் ஆகியோரும் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று வதந்திகளை கிளப்பியது, ஆனால் இருவரும் அதை மறுத்துள்ளனர்.

மாநில தேர்தல் தோல்வி

பாரிசான் நேஷனல் உறுதியான வெற்றிகளைப் பெற்றதை தொடர்ந்து, மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தல்களில் பெரும் தோல்விகளை சந்தித்தாலும் கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக அவர் கூறினார்.

பெர்சத்து தொடங்கி ஐந்து ஆண்டுகள் என்றும், பெரிகத்தான் நேஷனளுக்கு இரண்டு ஆண்டுகள் என்றும், அதனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“14வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெற பெர்சத்து உதவியது. ஆச்சரியம் என்னவென்றால், டாக்டர் மகாதீர் முகமட் ராஜினாமா செய்த பிறகு நாங்கள் அரசாங்கத்தில் முன்னணி கட்சியாக இருந்தோம்.

“மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தல்களில் ஊக்கமளிக்கும் ஆதரவைப் பெற்றோம் என்பதே உண்மை,ஐந்து வருடக் கட்சிக்கு,இந்து வெற்றி மக்களின் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டது.

மாநிலத் தேர்தல்களில் PN மற்றும் பெர்சசத்வின் தோல்விகளைப் பற்றி  கவலைப்படவில்லை, இது “ஒரு சாதாரண விஷயம்” என்று விவரித்தார், ஆனால் முக்கிய காரணி கட்சி பலப்படுத்தப்படும் செயல்பாட்டில் உள்ளது என்று கூறினார்.

“PKR மற்றும் PAS இன் வரலாற்றைப் பாருங்கள், அவர்கள் தங்கள் ஆதரவைப் பெருக்கவும் ஆரோக்கியமான எண்ணிக்கையிலான எம்.பி.க்களைப் பெறவும் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர்” என்று அவர் கூறினார்.

FMT